இளைஞர்களே உங்கள் சிறு வதிலேயே சொட்டை வர ஆரம்பித்து விட்டதா!! உடனே இந்த எண்ணையை தடுவுங்கள்!!

Photo of author

By Divya

இளைஞர்களே உங்கள் சிறு வதிலேயே சொட்டை வர ஆரம்பித்து விட்டதா!! உடனே இந்த எண்ணையை தடுவுங்கள்!!

தலை முடி உதிர்விற்கு முக்கிய காரணம் நாம் பின்பற்றி வரும் மோசமான உணவுப்பழக்கங்கள் தான்.உங்களை அழகாக காட்டுவதில் தலைமுடிக்கு முக்கிய பங்கு இருக்கின்றது.ஆனால் இளம் வயதிலேயே சிலருக்கு தலைமுடி உதிர்வு அதிகமாகி வழுக்கை விழுகிறது.முன் நெற்றி முடி உதிர்தல்,பின் வழுக்கை என்று பல வகைகளில் முடி உதிர்தல் ஏற்படுகிறது.

இவ்வாறு இழந்த முடிகளை மீண்டும் முளைக்க வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணையை தினமும் தலைக்கு அப்ளை செய்து வாருங்கள்.

1)தேங்காய் எண்ணெய்
2)கற்றாழை துண்டுகள்

250 மில்லி தேங்காய் எண்ணெயை சூடாக்கி 10 கற்றாழை துண்டுகளை போட்டு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.இந்த எண்ணையை நன்கு ஆறவிட்டு தலைக்கு தேய்த்து வந்தால் வழுக்கை தலையில் முடி வளரும்.

1)பாதாம் எண்ணெய்

தினமும் தலைக்கு பாதாம் எண்ணெய் அப்ளை செய்து வந்தால் தலை முடி வளர்ச்சி அதிகமாகும்.வழுக்கை தலையில் முடி வளர பாதாம் எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும்.

1)நெல்லிக்காய்
2)தேங்காய் எண்ணெய்

250 மில்லி தேங்காய் எண்ணையை அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளவும்.பிறகு ஐந்து பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை தேங்காய் எண்ணையில் சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு தலைக்கு தேய்த்து வந்தால் வழுக்கை தலையில் முடி வளரத் தொடங்கும்.

1)முருங்கை கீரை
2)தேங்காய் எண்ணெய்

ஒரு கப் முருங்கை இலையை தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை இரண்டு கப் தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து ஆறவிட்டு தலைக்கு அப்ளை செய்து வந்தால் முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக முடி முளைக்க தொடங்கும்.