தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை சாதிய படங்கள் என்பது பெரிதளவில் பேசப்படாமல் இருந்த ஒரு படமாகும். ஆனால் சமீப காலமாகவே குறிப்பிட்ட ஜாதி சார்ந்த படங்கள் அதிக அளவில் வெளிவருவதோடு அதனை இயக்கிய இயக்குனர் தங்கள் சாதியினுடைய வலிகளை எப்பொழுதும் எடுத்துக் கூறுவோம் என தெரிவித்திருக்கின்றனர்.
ஆரம்ப காலகட்டத்தில் தேவர் மகன், சின்ன கவுண்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜாதியை முன்வைத்து எடுக்கப்பட்ட பொழுதிலும் அது பெரும் அளவில் மக்களை காயப்படுத்தாததால் எந்தவித சிக்கலும் இன்றி ஓடின. ஆனால் அவற்றை தொடர்ந்து தமிழ் சினிமா துறையில் ஜாதிய படங்கள் பெறுதலும் வெளிவரவில்லை.
சமீபத்திய காலத்தில் இயக்குனர் ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் தங்களினுடைய ஜாதியில் மக்கள் சந்திக்கிற பிரச்சனைகளை வெளி உலகத்திற்கு எடுத்துக் கூறுவேன் என தொடர்ந்து அது குறித்த படங்களையே எடுத்த வண்ணம் உள்ளார். அதிலும் குறிப்பாக தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்கள் சந்தித்த கொடுமைகளை எடுத்துக் கூறுவதையே தன் படங்களின் கருவாக மாறி செல்வராஜ் பின்பற்றி வருகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் உன் ஜாதியை பற்றி நீ கூறும் பொழுது உன்னோடு போட்டியிட நான் வருகிறேன் என்பது போல திமிரு , காளை ஆகிய இரு படங்களை இயக்கி இருக்கக்கூடிய இயக்குனர் தருண் கோபி அவர்கள் கூறி இருப்பதோடு, உன்னோட ஜாதிய பெருமையா பேசணுமே தவிர மற்ற ஜாதியை தப்பா காட்டக் கூடாது என கொந்தளித்து இருக்கிறார். தமிழ் சினிமா துறையில் தற்பொழுது ஜாதி பிரச்சனை தலையெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.