Breaking News

மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!!

மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு என்ற பகுதியில் உள்ள  இளைஞர் ஒருவர் 9 வயது சிறுவனக்கு மது ஊற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அச்சிறுவனின் மயக்க நிலையில் இருப்பதை அறிந்த பெற்றோர் இந்திரஜித் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்பொழுது நடந்ததை விசாரித்த காவல் அதிகாரிகளிடம் பெற்றோர் இந்திரஜித்  தன் மகனுக்கு மதுவை ஊற்றி கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பதும் மது குடித்ததால் தன் மகன் மயங்கி இருக்கின்றான் என்றும் பெற்றோர் தெரிவித்தனர்.

அதனையடுத்து 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் மயங்கிய அந்த சிறுவனை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

உடனடியாக மயிலாடுதுறை போலீசார் சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்தாக கூறப்பட்ட  அறிவழகன் என்பவரை தேடி வந்த நிலையில் தலை மறைவாக இருந்த  அறிவழகனை மயிலாடுதுறை காவல் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மது குடித்து  மயக்கத்தில் இருந்த சிறுவனுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது சிறுவனின் உடல் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முதலில் பெற்றோர்கள் தனது குழந்தைகள் என்ன செய்கிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்று பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்பொழுது தான் இதனை போன்று பல சம்பவங்களை தவிர்க்க முடியும் மற்றும் சிறுவர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே இவற்றை எல்லாம் தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.