சிறுவனிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!!

0
143
#image_title

சிறுவனிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!!

சூலூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா. இவர் தனது வீட்டின் அருகே உள்ள இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அந்த சிறியவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

இதனால் சிறுவனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது இது குறித்து சிறுவனின் பெற்றோர் சிறுவனிடம் கேட்டபோது சூர்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர் புகாரின் பேரில் போலீசார் சூர்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சிறுவனை பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

இதனை அடுத்து சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர் 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.