சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன்.. மிரட்டி பணம் பறிப்பு..!

Photo of author

By Janani

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை, மதுரவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள அரசு பல்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணத்தினால் ஆன்லைன் மூலம் வகுப்புகளை பயின்று வந்தார். அதற்காக அவரது பெற்றோர் ஆண்ட்ராய்ட் செல்போன் வாங்கி தந்துள்ளனர். அந்த செல்போன் மூலம் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார்.

அப்போது அவருக்கு ஜார்ஸஜ் (19) என்ற கல்லூரி மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில், அந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமியின் வீட்டிற்கு வந்த அவர் அவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து பல முறை அந்த பெண்ணை மிரட்டி பணம் வாங்கியுள்ளார். இதனால், பயந்து போன அந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கல் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஜார்ஜை போக்சோ சட்டத்தின் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிள்ளைகளிடம் செல்போனை கொடுக்கும் பெற்றோர்கள் அவர் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது. அதே போல சமூகவலைதங்களில் இயங்கும் பெண்கள் இது போன்ற ஏமாற்று வேலைகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.