போதைக்கு அடிமையான இளைஞர்.. குடும்பத்தையே கொலை செய்த கொடூரம்..!

0
189

போதை மருந்து வாங்க பணம் தராததால் இளைஞர் தனது மொத்த குடும்பத்தையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள தென்மேற்கு பாலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு திருமணமாகி தர்ஷணா என்ற மனைவியும் கேசவ் என்ற மகனும் ஊர்வஷி என்ற மகளும் உள்ளனர்.அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கேசவ் குர்கானில் வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த தீபாவளி சமயத்தில் வேலையை விட்ட அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான அவரை குடும்பத்தினர் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியும் அவர் மீண்டும் போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.

போதைப்பொருள் வாங்க வீட்டில் பணம் கேட்டு தொல்லை செய்து வந்தார். ஆனால்,அவர்கள் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவர் தனது வீட்டில் உள்ள அனைவரையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் உள்ளே வந்து பார்த்த போது அவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனை அடுத்து, தப்பி செல்ல முயன்ற கேசவை பிடித்த அக்கம்பக்கதினர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்ப்டைத்தனர்.

Previous article4 இளம்பெண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட நபர்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
Next articleபால்பவுடரில் பர்ஃபியா? நாவூற வைக்கும் சுவையான ரெசிபி உங்களுக்காக…!