கல்யாண வயசில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது!!

Photo of author

By Parthipan K

கல்யாண வயசில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது!!

Parthipan K

Youth who sold adulterated liquor arrested!!

கல்யாண வயசில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது!!

சேலம் மாவட்டம் தலைவாசல் வீரகனூர் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் கள்ளச்சாராயம் விற்பதாக சேலம் மாவட்ட காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர சாராய வேட்டையில்  ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் வீரப்பனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லியங்குறிச்சி ஏரிக்கரை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் காட்டுக்கோட்டை அண்ணா சிலை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இவர் செல்வம் என்பவரது மகன் காந்தி என்பது தெரிய வந்தது.

இவர் பகுதியில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வீரகனூர் காவல்துறையினர் காந்தியை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து காந்தியை மேல்விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.