உயர் நீதிமன்றம் வைத்த ஆப்பு ! YouTube, Facebook, Twitter-க்கு தடை!

Photo of author

By Kowsalya

உயர் நீதிமன்றம் வைத்த ஆப்பு ! YouTube Facebook Twitter தடை!

வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.அது என்னவெனில் உலகமே கொரோனாவின் அச்சுறுத்தலுக்கும் வைரஸ் தொற்றால் ஏற்படும் பலிகளுக்கும் பயந்து நடுங்கி உள்ள நிலையில் யூடியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் ஆகிய வலைதளங்களில் வெறுப்புப் பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன.

கட்சித் தலைவர்கள் முதல் தொடங்கி கடவுள்கள் வரை அனைவரையும் அவமதித்து பிரச்சாரம் வெளியிடப்படுகின்றன.

தனி நபர்கள் சிலரின் கட்டுரைகளும் பேச்சுக்களும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறது.

வன்முறையைத் தூண்டும் ஆபாச வீடியோக்கள் பிரச்சாரங்கள், பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட கூடாது என்ற விதி கோட்பாடுகள் இருந்தும் இந்த மாதிரியான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து பகிரப் படும் பொழுது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

2018 ஆம் ஆண்டு வலைத்தளங்களை கண்காணிக்க மாநில சைபர் கிரைம் ஒன்றை மத்திய அரசு அனுமதித்தது. அதனை ஒழுங்காக கடை பிடித்து இருந்தால் இந்த மாதிரியான பிரச்சாரங்களும் பதிவுகளும் தடுக்கப்பட்டிருக்கும்.

கந்த சஷ்டி கவசம் மற்றும் பல ஆபாச வீடியோக்கள் உள்ளடக்கிய பதிவுகளை வெளியிட யூடியூப், ஃபேஸ் புக், டுவிட்டர் நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீது நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோரின் முன்னிலையில் அமர்வுக்கு கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பான கேள்விகளுக்கு மத்திய அரசும் ,மாநில அரசும் மூன்று வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.