இந்தியாவில் ப்ராட்பாண்ட் பரவலாக பயன்படுத்தத் துவங்கிய சமயத்தில் தான் YouTube தளம் நிறுவப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை ப்ராட்பேண்ட் பயன்பாட்டின் உச்ச வரம்பு காரணமாக குறைந்த அளவிலான இந்தியர்களே YouTube பார்த்து வந்தனர். YouTube பெரும்பாலும் படங்களின் முன்னோட்டங்கள் மற்றும் திரைப்பட பாடல்கள், காட்சிகள் பார்ப்பதற்கே பெரும்பான்மையானவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆக்ட் பிராட்பேண்ட் மற்றும் ஜீயோ அறிமுமானதற்க்கு பின்னர் YouTubeபை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்தது. இதனால் YouTubeல் பிராந்திய மொழிகளில் பல சேனல்கள் துவக்கப்பட்டு மக்களை ஈர்க்க துவங்கினர். இன்று அலைபேசி மூலம் YouTubeபை பார்ப்பவர்கள் கோடிக் கணக்கானோர் உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் YouTubeபை பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் இணையத்தின் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 67 நிமிடங்களுக்கு காணொளிகளை பார்ப்பதாகவும், மொத்த பார்வையாளர்களில் 70% பேர் 15 முதல் 34 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் காணொளிகளில் 54% இந்தி மொழியில் உள்ளதாக YouTube வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆங்கில காணொளிகளை 16% பார்வையாளர்களும், தெலுங்கு காணொளிகளை 6% பார்வையாளர்களும் , கன்னட காணொளிகளை 6% பார்வையாளர்களும், தமிழ் காணொளிகளை 5% பார்வையாளர்களும் பார்க்கப்படுவதாகவும் YouTube தெரிவித்துள்ளது.
பொழுதுபோக்கு தொடர்பான காணொளிகளையே அதிகமானோர் விரும்புவதாகவும் கூறியுள்ளது.