2 லிட்டர் சோடாவை மடமடவென வெறும் 18.45 வினாடிகளில் குடித்து உலக சாதனை!

Photo of author

By Kowsalya

2 லிட்டர் சோடாவை மடமடவென வெறும் 18.45 வினாடிகளில் குடித்து உலக சாதனை!

Kowsalya

அமெரிக்காவை சேர்ந்த போட்டியாளர் ஒருவர் மிகவும் குறைவான நேரத்தில் இரண்டு லிட்டர் சோடாவை குடித்து நம்பவே முடியாத புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

 

எரிக் பெட்லண்டஸ் புக்கர் என்றழைக்கப்படும் அந்த அமெரிக்கா நபர்தான் கின்னஸ் சாதனை செய்துள்ளார். குளிர்பானங்கள் மீது இவருக்கு இருந்த அதிகமான ஈர்ப்பை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனை என்ற உச்சத்திற்கு உணவு மீது கொண்ட ஈர்ப்பு கொண்டு சென்று உள்ளது.

 

அந்த அமெரிக்க நபர் 2 லிட்டர் பாட்டில் சோடாவை 19 வினாடிகளில் குடித்த அந்த வீடியோவை தனது பிரபல யூடியூப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதனை கின்னஸ் உலக சாதனை அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் இந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளது.

அதுமட்டுமின்றி இவர் ஒரு Rap பாடகர் ஆகவும் இருந்திருக்கிறார். பாடி அதை வீடியோ எடுத்து போடுவது, பல இடங்களுக்குச் சென்று vlog போடுவது, அதிகமான சாப்பாட்டு திறன் பற்றி ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக வீடியோ போடுவது தான் இவருடைய பன்முகத்திறமை ஆகவே உள்ளது.

 

கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு யூட்யூபில் ஷேர் செய்யபட்ட அந்த வீடியோவில் முதலில் அந்த நபர் 2 லிட்டர் சோடாவை ஒரு ஜாரில் ஊற்றி அளவிட, முன்னர் அவர் எந்த மாதிரியான சாதனையை படைத்துள்ளார் என்பது பற்றி பேசி வருகிறார். பின் சரியான அளவை அளந்து நமக்கு காட்டி விட்டு அதை தூக்கி ஒரே கல்பாக மடமடவென்று சில வினாடிகளில் அதை முழுவதுமே குடித்து விடுகிறார். அவர் ஸ்டாப் வாட்ச் ஒன்றை பயன்படுத்துகிறார் அதில் 18புள்ளி 45 விநாடிகளில் முழுவதையும் குடித்து விடுவதை காண்பிக்கிறது. இந்த வீடியோ share செய்யப்பட்டதில் இருந்து 1.5 மில்லியனுக்கு அதிகமான பார்வயாளர்கள் பார்த்து உள்ளனர்

55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளது.

 

இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் சந்தோஷப்பட்டு கமென்ட் தெரிவித்துவருகின்றனர். இவர் சோடா இல்லை கடலையே குடிக்கும் திறன் கொண்டவர் என்று வேடிக்கையான கமெண்டுகளும் வருகின்றது. அதேபோல் இவரது யூடியூப் சேனலில் உணவு சாப்பிடும் திறன் குறித்தும் பானங்களை எப்படி வேகமாக குடிப்பது என்ற திறன்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதேபோல் இவருக்கு Rap பாடலில் அதிகமான ஆர்வம் உள்ளதால் இதுவரை 9rap பாடல்களைப் பாடி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.