யூடியூபர் இயக்கும் நயன்தாரா அவர்களின் திரைப்படம்!!! இணையத்தில் டைட்டில் லுக் போஸ்டர் வைரல்!!!

0
141
#image_title

யூடியூபர் இயக்கும் நயன்தாரா அவர்களின் திரைப்படம்!!! இணையத்தில் டைட்டில் லுக் போஸ்டர் வைரல்!!!

பிரபல யூடியூபர் டூட் விக்கி இயக்கத்தில் நடிகை நயன்தாரா அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

ஹிந்தி திரையுலகில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடித்துள்ளார். இதையடுத்து நடிகை நயன்தாரா அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று(செப்டம்பர்17) பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் செப்டம்பர் 18ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இன்று(செப்டம்பர்18) காலை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி நடிகை நயன்தாரா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை யூடியூப் சேனல் பிரபலம் டூட் விக்கி அவர்கள் இயக்குகிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அவர் அறிமுகமாகிறார்.

மண்ணாங்கட்டி திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மண்ணாங்கட்டி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைக்கிறார். இன்று(செப்டம்பர்18) காலை இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Previous articleதமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா?
Next articleதிருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அற்பணித்த அற்புதமான தலைவர்கள்!!