புகைப்படத்தில் சிவாஜிக்கு அருகிலுள்ள குழந்தை யார் தெரியுமா? 90s 2K கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்தவர் 

0
788
#image_title

புகைப்படத்தில் சிவாஜிக்கு அருகிலுள்ள குழந்தை யார் தெரியுமா? 90s 2K கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்தவர்

சமீப காலங்களில் பல திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது ஒரு முக்கிய பிரபலத்தின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் உள்ள குழந்தை 90ஸ் கிட்ஸ் முதல் தற்போது 2K கிட்ஸ் வரை அனைவருக்கும் பிடித்த மற்றும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பிரபலம் ஆவார்.

இவர் மட்டுமின்றி இவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் தமிழ் திரையுலகில் முக்கிய பிரபலங்கள் தான். அதிலும் இவர் தந்தை இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் மிகவும் பிரபலம். மேலும் இவரது தந்தை தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார். இது எந்த அளவிற்கு என்றால் இவருக்கு நிகர் இவரே என்று தான் கூறவேண்டும்.

தந்தைக்கு பிள்ளை ஒரு போதும் சளைத்தவர் இல்லை என்பதை இவர் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டு தான் உள்ளார். இவருக்கும் திரைத்துறையில் பல முகங்கள் உள்ளது. எனினும் பலருக்கும் பரிச்சயமான ஒன்று என்றால் அது இவரது இசை தான். இவரது இசையில் வெளியாகும் பாடல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரது பாடல்களுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் திரைத்துறையில் இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவராகவும் உள்ளார். இந்த தகவல்கள் மூலம் அவர் யார் என்பதை கண்டுபிடித்திருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆம் அவர் வேறு யாரும் இல்லை தனது சிறுவயது முதல் இசையுலகில் கலக்கி வரும் இசை ஜாம்பவான் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா தான் இந்த குழந்தை.