என்ஜாய் எஞ்சாமி அறிவுடன் இணையும் யுவன்! இணையத்தில் வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Photo of author

By Rupa

என்ஜாய் எஞ்சாமி அறிவுடன் இணையும் யுவன்! இணையத்தில் வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தற்பொழுது சினிமா காலக்கட்டத்தில் பல பாட்டுக்களில் அர்த்தங்கள்  இல்லாவிட்டலும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறது.அந்தவகையில் பல பாடல்கள் அர்த்தமுள்ளதாகவும் வெளி வருகிறது.அவைகளும் அதிகளவு பிரபலமடைகின்றது.மேலும் பட பாடல்களை காட்டிலும் ஆல்பம் மூலம் வரும் பாடல்கள் அதிகளவு பிரபலமடைகின்றது.

அந்தவகையில் சந்தோஷ் நாராயண் மகளான தீ மற்றும் அறிவு ஆகியோர் சேர்ந்து பாடிய எஞ்சாமி பாடல் அதிகளவு பிரபலமடைந்தது.அதுமட்டுமின்றி அப்பாடல் அதிக மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.அந்த பாடலிலிருந்து அறிவு அதிகளவு பிரபலமடைந்தார்.அதனையடுத்து யுவன் மிகப்பெரிய இசை ஜாமவனின் மகன் ஆவார்.இவர் தந்தைக்கு இணையாகவே யுவனும் பல பாடல்களை இசையமைத்துள்ளார்.அதுமட்டுமின்றி தந்தை போலவே யுவனும் இசையமைப்பதில் அதிக பேர் பெற்றவர்.

இவருக்கென்றும் இவரது பாடலுக்கென்றும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இவரது இசையில் வரும் அனைத்து பாடல்களும் வெற்றியடைந்துள்ளது.தற்போது யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் ஏஞ்சாமி அறிவுடன் யுவன் இருக்குமாறு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தின் கீழ் டு எக்ஸ்சிடிங் அப்டேட்ஸ் வித் மை ப்ரோ என்று குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் இவர்கள் இருவரும் இணைந்து காம்பினேஷனில் பாட்டு வெளிவர போவதை கூறுகின்றனர்.

https://www.instagram.com/p/CUFUJtss5iY/?utm_source=ig_web_copy_link

இந்த போஸ்டை இணையத்தில் யுவன் பதிவிட்டதும் பல ரசிகர்கள் அந்த பாட்டிற்காக காத்திருக்கிறோம் என்று கமென்ட் செய்து வருகின்றனர்.அதில் குறிப்பாக கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன் என்னால் காத்திருக்க முடியவில்லை.சீக்கிரம் பாட்டை ரிலீஸ் செய்யுங்கள் என்றவாறு கமென்ட் செய்துள்ளார்.இந்த பாட்டும் அதிகளவு பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டுமின்றி யுவனின் இந்த அறிவிப்பிற்கு பிறகு ரசிகர்கள் பெருமளவு காத்துக்கொண்டிருக்கின்றனர்.அதுமட்டுமின்றி இவர்களின் சேர்க்கை இதுவே முதல் முறையாகும்.அதனால் இவர்கள் பாட்டின் பற்றிய எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது.அதுமட்டும்னின்றி இது வலிமை படத்தின் பாடல் என்றும் கூறுகின்றனர்.