சோமேட்டோவின் பத்து நிமிஷம் ஆஃபர்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Photo of author

By Rupa

சோமேட்டோவின் பத்து நிமிஷம் ஆஃபர்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

வளர்ந்து வரும் காலகட்டத்தில் பல தொழில்நுட்பத்திற்கு மக்கள் முன்னேறி வருகின்றனர். முன்பெல்லாம் உணவு உண்ண உடைகளில் வாங்க என மக்கள் வெளியே செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். தற்போது இதை அனைத்தையும் தவிர்த்து வீட்டில் உட்கார்ந்து படியே அனைத்தையும் வர வைத்து விடலாம் என்ற நிலைக்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. இந்தப் பக்கம் திரும்பினாலும் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஸ்மார்ட் போனால் பல நல்ல காரியங்களும் அதற்கு ஏற்றார் போல் பல தீய காரியங்களும் நடைபெறுகிறது. பெண்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கமே ஒரு ஆப்பை உருவாக்கியுள்ளது.

ஆபத்தை உணரும் பெண்கள் அந்த ஆப் மூலம் தகவல் தெரிவிக்கலாம். போலீசார் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்க பெரும் உதவியாக உள்ளது. அதற்கு மாறாக மற்றொரு புறம் பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை எடுத்து மாற்பிங் செய்து அவர்களை இழிவு படுத்துவதை ஒரு கும்பல் வேலையாக வைத்துள்ளது. இதுபோல பலவற்றை சொல்லிக்கொண்டு போகலாம். சமீபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர் பணி நேரத்தில் தொலைபேசி பயன்படுத்தக் கூடாது என்று அரசாங்கம் ஆணையிட்டது. அவ்வாறு பேசுவதால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் இவ்வகையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.

இவ்வாறு இருக்கையில் சோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தீபந்தர் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிதாக ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவால் பல தரப்பிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் மற்ற டெலிவரி பார்ட்னர்ஸ் வுடன் போட்டியிடவும் இவ்வாறன புதிய ஆஃபரை கூறியுள்ளார். அடுத்த வாரத்தில் இருந்து குர்கான் பகுதியில் முதன் முதலாக இந்த பத்து நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் ஆப்பர் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒவ்வொருவரும் உணவை ஆர்டர் செய்து விட்டு அது தயாராகும் நேரம் மற்றும் கொண்டு செல்லும் தூரத்தை பொறுத்து காலதாமதம் ஏற்படும். குறைந்தபட்சம் ஒரு உணவை தயார் செய்து கொண்டு செல்லும் என்று செலுத்த அரை மணி நேரம் ஆகும்.

மற்ற ஃபுட் டெலிவரி உடன் போட்டியிட சோமட்டோ நிறுவனர் இனி நாங்கள் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யவும் என்று கூறியுள்ளார். இவர் பத்து நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்பதை பார்த்து அதிக மக்கள் சோமேட்டோவை உபயோகப்படுத்துவர். ஆனால் அந்த பத்து நிமிடத்தில் எடுத்து செல்லும் டெலிவரி ஆட்களை சிறிதும் அவர்களது பாதுகாப்பை உணரவில்லை. பத்து நிமிடத்தில் உணவு எடுத்துக் கொண்டு செல்பவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து அதிவேகத்தில் தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது அதிக விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவிப்பை பலர் எதிர்த்து வருகின்றனர்.