அஜித்தின் திடீர் முடிவு!! உலக அளவில் ரிலீஸ் ஆகும் வெப் தொடர்!!

Photo of author

By Vinoth

நடிகர் தல அஜித் குமார் அவர்களின் திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எதுவும் வெளியாகவில்லை. இதனால் தல ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். அதன் பிறகு தற்போது அவர்  நடிக்கும் ‘குட் பேட் அகில்’ மற்றும் ‘விடாமுயற்சி’ ஆகிய இரண்டு படங்கள் நடித்து வருவதாக படக்குழுவினர் அதற்கான அப்டேட்களை கொடுத்தனர். மேலும் ‘குட் பேட் அகில்’ திரைப்படம் இன்னும் ஏழு நாட்கள் ஷூட்டிங் மட்டும் உள்ளதால் இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விடாமுயற்சி திரைப்படம் மே 1 அவருடைய பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தல அஜித் தனது இரண்டு படங்களையும் சீக்கிரமாக முடித்துவிட்டு கார் ரேஸுக்கு செல்லவிற்பதாக தெரிவித்திருந்தார். அதற்கான வேலைப்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று கொடுத்துள்ளார். அவர் ஏற்கனவே வேர்ல்டு டூர் போனதை ஒரு டாக்குமெண்ட்ரியாக படமாக்க முடிவு செய்துள்ளார். அதற்கான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கின்றது.

இதற்கிடையே பேக்கிங் பார்ட், மணி வேஸ்ட் வெப் தொடர்கள் போல நல்ல வெப் தொடர்களை நடிக்க அவர்  திட்டமிட்டுள்ளார். தற்போது அதற்கான கதைகளை கேட்கும் பணிகளை அஜித் ஆரம்பித்துள்ளார். மேலும் இந்த வெப் தொடர் மூலம் தனக்கு உலகளாவிய ரசிகர்களை உருவாக்கவும் அஜித் திட்டமிட்டுள்ளார். என இந்த தகவல் தல ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.