அடுத்தடுத்து தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சி! வீதியில் தஞ்சம் புகுந்த மக்கள்!
இந்தோனேசியாவில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை தொடர்நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனோஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பின் பாதிப்புகள் இன்னும் சரிவர முடிவடையாத நிலையில் தற்போது அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் இன்று இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் இன்று அதிகாலை ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துபடி வீட்டில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
அதையடுத்து சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. எனினும் அங்கு நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் இன்னும் வெளிவரவில்லை. தற்போது இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னறிவிப்பாக இருக்கலாம் என்று பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.