அதானி மற்றும் அவரது மருமகன்களுக்கு பிடிவாரண்ட்!! நியூயார்க் நீதிமன்றம் அதிரடி!!

Photo of author

By Jeevitha

அதானி மற்றும் அவரது மருமகன்களுக்கு பிடிவாரண்ட்!! நியூயார்க் நீதிமன்றம் அதிரடி!!

Jeevitha

Adani and his sons-in-law warrant!! New York court in action!!

அதானி மற்றும் அவரது மருமகன்கள் ஏழு பேரும் சேர்ந்து இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு  லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர்களை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஊழல் வழக்கில் அதானி மற்றும் அவரது மருமகன்கள் மீது நியார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கெளதம் அதானி மற்றும் அவரது மருமகன்கள் சாகர் அதானி, வினீத் அதானி, ரஞ்சித் குப்தா, சௌரவ் அகர்வால் உள்பட 7  பேரின் மீதும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்களை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த கைது வாரண்டுகளை கொண்டு இந்தியாவில் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின் நிலையத் திட்டத்தை 20 ஆண்டுகளில் இரண்டு பில்லியன் டாலர்களை ஈட்ட கூடிய மிகப்பெரிய ஒப்பந்தத்தை பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க நினைத்தது.

அதை அதானி குழுமம் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதானி குழுமம் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. இந்த முறைகேடாக பெறப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து கடன் மற்றும் பத்திரங்கள் மூலம் அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 25,000 கோடி நிதியை திரட்டியது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் நியூயார்க் நீதிமன்றம் அவர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.