இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்பது சதவீத மக்கள் நினைத்தால் உடல் எடையை ஏறவில்லையே என்று 20% மக்கள் வருத்தப்படுகின்றனர். உடலுக்கு ஏற்ற எடையும் இருந்தால்தான் பார்க்க மிகவும் அழகாக இருப்பார்கள். அதேபோல் உடல் எடை குறைவதும் ஒரு சில நோயின் அறிகுறியே. அதனால் உடலின் அழகை மேம்படுத்துவதற்காக உயரத்திற்கு ஏற்ற எடையை நாம் கவனித்துக் கொள்வது மிக அவசியம்.
தேவையான பொருட்கள்:
1. வெண்பூசணி விதை
2. பால் ஒரு டம்ளர்
3. நாட்டு சர்க்கரை தேவையான அளவு.
செய்முறை:
1. வெண் பூசணி விதைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வெண்பூசணியை வாங்கி உள்ளே உள்ள விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்தி மேலே உள்ள தோலை மட்டும் வைத்துவிட்டு உள்ளே உள்ள பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
2. அந்த பருப்பை நன்கு பொடியாக்கிக் எடுத்துக் கொள்ளவும். இந்த பொடியை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
3. இப்பொழுது ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் அளவுக்கு பொடியாக்கி வைத்த வெண் பூசணி விதைகளை போட்டு கொள்ளவும்.
4. அதனுடன் ஒரு டம்ளர் சூடான பாலை சேர்க்கவும்.
5. தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தி கொள்ளவும் அல்லது வெல்லம் கூட பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
1. இந்தப் பாலை காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வைக்கவேண்டும்.
2. இரவு படுக்கச் செல்வதற்கு முன் குடிக்க வேண்டும்.
இந்தப் பாலை தொடர்ந்து ஒரு மாதம் வரை குடித்து வர ஒரே மாதத்தில் பத்து கிலோ அளவிற்கு உங்கள் உடல் அதிகமாவதை நீங்கள் காணலாம்.