அமெரிக்காவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு! எதிரிகளின் சூழ்ச்சியா என விசாரணை
கடந்த 4 ஆம் தேதி அமெரிக்காவில் சுதந்திர தினத்தை ஒட்டி பல்வேறு இடங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் இந்த சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக ஓஹியோ மாகாணத்தின் சின்சின்னாட்டி என்ற நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இள வயதுடைய 400 பேர் திரண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.அமெரிக்காவில் அவ்வப்போது ஆங்காங்கு சிறு கலவரங்களும் ,சண்டைகளும் நிகழ்வது அமெரிக்காவில் வழக்கமானது.ஆயினும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இரு வாலிபர்கள் உயிரிழந்தது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒருவர் 19 வயது, ஒருவர் 21 வயது உடையவர் அவர்களின் உடல் கண்டறியப்பட்டது ,ஆயினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்று தெரியவில்லை.
இதுகுறித்து, பல்வேறு அமெரிக்க அதிபர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.இது மக்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தின் முதிர்ச்சியா? அல்லது அமெரிக்காவின் கொண்டாட்டத்தை குழப்ப எதிரி நாட்டின் சதியா?
கடந்த காலத்தில் முதல் உலகப்போர் தொடங்க காரணமும் ஒரு துப்பாக்கிச் சூடு தான் என்பது குறிப்பிடத்தக்கது.