எல்லையில் சீனா அத்து மீறல்! போருக்கான எச்சரிக்கையா?

0
144
India China Border Issue
India China Border Issue

எல்லையில் சீனா அத்து மீறல்! போருக்கான எச்சரிக்கையா?

இந்திய சீன எல்லையில் இரு நாடுகளுக்கிடையே அவ்வப்போது சச்சரவுகள் ஏற்பட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது மீண்டும் சீனா அத்து மீறலில் ஈடுபட்டுள்ளது.இந்திய எல்லையில் அனுமதியின்றி  சுற்றித் திரிந்த ட்ரோன் சீனா உடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக எல்லையில் அடிக்கடி படைகளை சீனா அதிகப்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவும் எல்லையில் ராணுவப்படையை குவித்து வருகிறது .சீனாவின் இத்தகைய செயலுக்கு பல்வேறு முறை இந்தியா வருத்தம் தெரிவித்தது. ஆயினும் சீனா இதுகுறித்து சமரசத்திற்கு முற்படவில்லை.

கடந்த மாதம் 27 ம் தேதி அதாவது(27-6-2021) அன்று இந்தியாவின் ராணுவ எல்லைக்குள் ட்ரோன் வெடிகுண்டுகளை வீசி தாக்குதலில் நடத்தியது. இதனால் ,எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது, ஆயினும் அந்த ட்ரோனை கைப்பற்றிய இந்திய ராணுவம், அதை ஆய்வுக்கு அனுப்பியது.

ஆய்வின் முடிவில் அந்த ட்ரோன் சீன நாட்டில் தயாரிக்கப்பட்டது எனும் திடுக்கிடும் செய்தி வெளிவந்தது!!!!

இது சீன நாட்டில் தயாரிக்கப்பட்டது எனில், இது சீன ராணுவத்துடையதா ? அல்லது தீவிரவாதிகள் உடையதா ? போருக்கான வேண்டுதலை முன்வைக்கிறதா சீனா?
எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராகுமா இந்தியா? என பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.