அரசு அளிக்கும் ரூ.24000 ஆயிரம் .. முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! யாரெல்லாம் தகுதியானவர்கள்?

Photo of author

By Rupa

அரசு அளிக்கும் ரூ.24000 ஆயிரம் .. முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! யாரெல்லாம் தகுதியானவர்கள்?

தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் குடிசை மாற்று வாரியம் சார்பாக மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகிறது. அந்த வகையில் குடிசை பகுதியில் வாழும் மக்கள் குடிசை மாற்று வாரியம் வீட்டிற்கு செல்லும் வரை அவர்கள் வாழ்வாதாரத்திற்கு பணம் வழங்கப்படும். அவ்வாறு சென்ற ஆட்சியில் ரூம் 8000 வரை வழங்கி வந்தனர். தற்பொழுது இதனை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கி வருகின்றனர். இது குறித்து நேற்று அமைச்சர் மறு கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், சென்னையில் குடிசை பகுதியில் வாழும் மக்கள் குடிசை மாற்று வாரியம் திட்டத்தின் கீழ் காண்ட்ராக்ட் வீடுகளில் வாழ வேண்டும். இந்த திட்டத்தை முதன் முதலில் கலைஞர் 1970 ஆம் ஆண்டு கொண்டு வந்தார். தற்பொழுது இந்த திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் முடிவுற்றது. கடந்த ஆட்சியில் வீடு கட்டும் வரை அவர்களின் குடியிருப்பு வாழ்வாதாரத்திற்காக 8000 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

தற்பொழுது கருணைத்தொகை என்ற அடிப்படையில் 24 ஆயிரம் வரை வழங்க உத்தரவிட்டு உள்ளனர்
அந்த வகையில் மறு கட்டுமானம் செய்ய உள்ள குடியிருப்பு காரர்களுக்கு அடுத்தடுத்து கருணைத்தொகை வழங்க உள்ளோம். தற்பொழுது நடைபெற்ற கணக்கெடுப்பில் 27 ஆயிரத்து 538 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக உள்ளது. இது குறித்து முதல்வர் அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.

அவ்வாறு தெரிவித்ததற்கு அந்த குடியிருப்புகளை எடுத்துவிட்டு புதிய குடியிருப்பில் கட்டித் தருமாறு உத்தரவிட்டுள்ளார். அத்தோடு அதற்கு 1200 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளனர். இதில் 7500 வீடுகள் கட்ட உத்தரவிட்டு உள்ளனர். மேலும் 2400 கோடி அளவில் 15000 அடுக்குமாடி உள்ளது. அதனால் தற்பொழுது அவர்களுக்கு கருணைத்தொகையானது பத்தாயிரம் பேருக்கு வழங்கி உள்ளனர்.

அது மட்டுமின்றி முன்பு 200 முதல் 300 சதுர அடியில் பொதுமக்கள் வசித்து வருவதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளானர். தற்பொழுது அவர்களின் வசதிக்காக 400 சதுர அடிக்கு வீடு கட்ட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.