இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்!

0
120
Work in these companies for only 4 days! Employees in excitement!
Work in these companies for only 4 days! Employees in excitement!

இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்!

இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் ,அமேசான் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணி சுமையை அதிகரித்தும்,பணியாளர்கள் வருந்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

ஆனால் தற்போது உலகில் பல்வேறு நிறுவனங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற கொள்கைக்கு மாறி வருகின்றன.அதுபோலவே தற்போது பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நான்கு நாட்களுக்கு மட்டும் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

மேலும் பணி செய்யும் நாட்களை விட மற்ற நாட்களில் பணி நேரம் அதிகரிக்காது.மேலும் சம்பளத்தை குறைக் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பானது அந்தந்த நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.மேலும் இந்த 100 நிறுவனங்களில் பணியாற்றும் சுமார்  2000 மேற்பட்ட பணியாளர்கள் பணி நேர குறைவால் பயன் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K