அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு; இன்று தொடக்கம்!

Photo of author

By Vijay

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

2021-2022 ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று தொடங்கியது. நேற்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் இன்றும், நாளையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதில் 437 எம்பிபிஎஸ், 97 பல் மருத்துவ இடங்கள் அடங்கும். மேலும், இன்று 650 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு 37 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5 ஆயிரத்து 175 இடங்களும், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 200 இடங்களும் உள்ளன. மாநில ஒதுக்கீட்டிற்கு 4 ஆயிரத்து 319 எம்பிபிஎஸ் இடங்களும், 170 பல் மருத்துவ இடங்களும் உள்ளன