ஒரு உறவில் உண்மை மற்றும் அன்பு இருந்தால் மட்டுமே அந்த உறவு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.பொய்,வெறுப்பு,பொறாமை இருந்தால் நிச்சயம் அந்த உறவு பாதிலேயே முடிந்துவிடும்.ஆனால் சில எதிர்பாராத சந்தர்ப்பங்களில் பொய் சொல்லும் நிலைக்கு தள்ளப்படுவதால் அது உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது.
ஒருவருடன் காதல் உறவில் இருப்பவர் தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டே இருந்தால் அது அதீத சந்தேகம் மற்றும் வெறுப்பை ஏற்படுத்திவிடும்.ஒருமுறை பொய் சொல்லி பழகிவிட்டால் அது ஒவ்வொருமுறையும் பொய் சொல்ல தூண்டும்.இது உறவிற்கு ஆபத்தாகிவிடும்.
ஆண்,பெண் இருவரும் பொய் சொல்கின்றனர்.ஆண்கள் பொய் சொன்னால் பெண்கள் அதை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.இதுவே பெண் பொய் சொன்னால் அதை ஆண்களால் கண்டுபிடிப்பது சற்று கடினமானதாக இருக்கும்.
இனி அதை பற்றிய கவலையே வேண்டாம்.பெண்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை சில ட்ரிக்ஸ் வைத்து தெரிந்து கொள்ளலாம்.பொதுவாக ஒருவர் பொய் பொய் சொல்லும்போது அவரின் பேச்சில் தெளிவு இருக்காது.பேசும் போது தன்னம்பிக்கை குறையும்.இந்த சூழலில் அவர்களின் உடல்மொழி சற்று மாறுபட்டு இருக்கும்.
பெண்கள் பேசும் போது கீழ் நோக்கி பார்த்தால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.பெண்கள் பொய் சொல்லும் போது அவர்கள் வார்த்தையில் தடுமாற்றம் ஏற்படும்.அந்த சமையத்தில் அவர்களுக்கு பேச்சு தொடர்ச்சியாக வராது.இதை வைத்து பொய் சொல்கிறார் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
உங்கள் காதலி அடிக்கடி நோ என்று சொல்கிறார்கள் என்றால் அவர் அதிகம் பொய் கூறுகிறார் என்று அர்த்தம்.நீங்கள் கேள்வி கேட்கும்போது பெரும்பாலும் NO என்பது பதிலாக இருந்தால் நிச்சயம் பொய் சொல்கிறார் என்று அர்த்தம்.
பெண்கள் பொய் பேசும் போது மிகவும் அசௌகரியமாக உணர்வார்கள்.பேச்சில் தடுமாற்றம் ஏற்படும்.இதை வைத்து பொய் கூறுகிறார் என்பதை கண்டறிந்துவிடலாம்.