இந்தப் பக்கம் பணம் அந்தக் கையில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்! ஆசையால் மோசம்போன இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்!

0
175
Great jackpot for government employees! Rs 311 crore set aside as bonus!
Great jackpot for government employees! Rs 311 crore set aside as bonus!

இந்தப் பக்கம் பணம் அந்தக் கையில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்! ஆசையால் மோசம்போன இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்!

தற்பொழுது வளர்ந்துவரும் காலகட்டம் என்பதால் அதிகப்படியான மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி தவித்து வருகின்றனர்.பல இடங்களில் தாங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை அமையாததால் பெருமளவு சிரமப்படுகின்றனர்.அந்த சமயத்தில் யாரேனும் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியதும் அதனை மக்கள் நம்பி விடுகின்றனர்.அவரை நம்பி பல லட்சம் ரூபாயை இறந்த பிறகு போலீசாரை நாடி வருகின்றனர்.அந்த வகையில் சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை ஆவடி சேர்ந்தவர் தான் முரளி.

இவர் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்துள்ளார்.இவருக்கு சமீபகாலத்தில்  திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெபராஜ் என்பவர்  பழக்கமாகி உள்ளார்.இவர்கள் இருவரும் நட்புடன் பழகி வந்துள்ளனர்.முரளி வேலை இல்லாமல் இருக்கிறார் என்பதை  என்பதை அறிந்த ஜெபராஜ் அவருக்கு சிறு,குறு தொழில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளார்.ஜெபராஜ் நண்பரான வெங்கடேசன் என்பவரும் முரளியிடம் நாங்கள் பலருக்கு அரசாங்கத்தில் வேலை வாங்கித்தந்துள்ளோம் என கூறியுள்ளார்.அந்தவகையில் எங்களுக்கு அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் பழக்கம் உள்ளது என்று  அரசியலில் உள்ள பிரமுகர்களிடம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.

முரளியும் இதனையெல்லாம் பார்த்து நம்பி இவர்கள் கேட்கும் பணத்தை தவணையாக கொடுத்து வந்துள்ளார்.முரளி தற்போது வரை 56 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.பிறகு முரளி அப்பாயின்மென்ட் ஆர்டர் கேட்டதும் அவருக்கு போலியான நியமன ஆணையை ஜெபராஜ் மற்றும் வெங்கடேசன் கொடுத்துள்ளனர்.கொடுத்த பணத்திற்கு வேலை வந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைவதற்குள்ளேயே அந்த நியமனம் ஆணை போலி என்று தெரியவந்தது.அதனையடுத்து ஜெபராஜ் மற்றும் வெங்கடேசனுக்கு முரளி பலமுறை தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அவர்களது தொலைபேசி எண்ணை தற்காலிகமாக துண்டித்து வைத்துள்ளனர்.அதனையடுத்து முரளி கொடுத்த பணத்தை  மீட்பதற்காக போலீசாரிடம் புகார் அளித்தார்.விசாரணை,கமிஷ்னர் சங்கர் ஜிவால் முன்னிலையில் நடைபெற்றது.இவர் அனுப்பிய ஜெபராஜ்,வெங்கடேசன் வங்கி கணக்குகளை போலீசார் சோதனை செய்தனர்.அதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் நிர்மல்குமார்,விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அய்யாசாமி, போன்றோரும் கூட்டணி என தெரியவந்தது.இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து அரசியல் பிரமுகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி சிறு மற்றும் குறு தொழில் நிறுவனத்தில் துறை இயக்குனர் வேலை வாங்கி தருவதாக பல லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த நால்வரையும் கைது செய்து அவர்களிடமிருந்து போலி நியமன ஆணைகள்,வங்கி பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் அவர்களது கார் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். மேற்கொண்டு அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மக்களே  இவர்களைப்போல் புகைப்படங்களை காட்டி வேலை வாங்கி தருவதாக கூறுபவர்களை நம்பி பணத்தை தொலைக்க வேண்டாம் என்று போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜீவா கேட்டுக்கொண்டார்.

Previous articleலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! நன்றி தெரிவித்த எஸ் பி வேலுமணி!
Next articleமுன்னாள் அமைச்சர் போட்ட புது குண்டு! அதிர்ச்சியில் திமுகவினர்!