இந்தியன் 2 பேச்சுவார்த்தை ! நீதிமன்றம் முடிவை எதிர்ப்பார்க்கும் படக்குழு!

0
141

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் பலர் நடித்து வரும் படம் தான் இந்தியன் 2.
இந்த படம் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த படத்தை முடிக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்க செல்லக்கூடாது என்று லைகா தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

பின்னர் லைகா மற்றும் இயக்குனருடன் எவ்வளவு பேச்சுவார்த்தை நடந்த பின்னரும் பயனளிக்காமல் மீண்டும் நீதிமன்றத்தையே படக்குழுவினர் நாடி உள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கமலஹாசன் இந்த விவகாரத்தில் லைகா நிறுவனத்திடமும், இயக்குநர் ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவருடைய பேச்சு சுமூகமாக முடிய வில்லை என்று வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன்படி அனைவரும் நடந்து கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டாராம்.

நீதிமன்றம் இயக்குனர் ஷங்கரிடம் இப்படத்தை முடிக்க வேண்டும் அதன் பின்னால் வேறு படத்திற்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டால், படத்தில் தொடர்ந்து நடிப்பாராம், அதற்கான தேதிகளையும் கமலஹாசன் அவர்கள் தருவாராம்.

இல்லையெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரித்து வரும் விக்ரம் படத்தில் நடிக்க போய்விடுவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசிக்கொள்கிறார்கள்.

Previous articleதமிழக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த பாஜகவின் எல்.முருகன்!
Next articleஓ.டி.டி. ரீலிஸ்க்கு படங்கள் ரெடி! குடும்பத்தோடு பார்க்கலாம்!