இந்தியாவின் 5 -ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவது எப்பொழுது? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

0
249

இந்தியாவின் 5 -ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவது எப்பொழுது? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

      5G தொலைத்தொடர்பு துறை (DoT) சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் 5G சேவை விரைவாக அமுல்படுத்தப்படும்.

இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதற்கு தொடர்பாக மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் கோரிக்கையை வெளியிட்டார். 5 ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதன் மூலம் 5 ஜி சேவை பொதுமக்களுக்கும்,  தொழில்நிறுவனங்களுக்கும் கிடைக்கும். அதே சமயம், 4G அலைக்கற்றை மூலம் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வரவுள்ள 5G .தொழில் நுட்பத்தின் மூலம் புதிய தலைமுறை தொழில்கள், புதிய நிறுவனம் உருவாகும். அதன்மூலம் ஏராளமானவர்க்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 5ஜி தொலைதொடர்பு சேவை என்பது தற்போது நடைமுறையில் இருக்கும் 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகத்தையும் திறனையும் நெட்வொர்க் அதிகமாக இருக்கும் என தெரிவித்தனர். இந்தியாவில் 4 G அலைக்கற்றை 2014 ஆண்டில் தொடங்கினர் . 72097.85 மெகா ஹெர்ட்ஸ் அளவிலான அலைக்கற்றைகள், ஜூலை இறுதிக்குள் 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக ஏலதாரர்கள் முன்பணம் செலுத்த தேவையில்லை. அலைக்கற்றை 20 வருடத்தில் சம அளவு கட்டணங்களை தவணை முறையில் செலுத்தவேண்டும். ஒவ்வொரு வருட ஆரம்பத்தில் தவணை முன்கூட்டியே கட்டணங்களை கட்டவேண்டும். அலைக்கற்றை ஏலதாரர்களுக்கு 10  ஆண்டுகளுக்குப் பிறகு சரணடைய விருப்பம் வழங்கப்பட்டு, எஞ்சியுள்ள தவணை எதிர்காலத்தில் எதுவுமில்லை.

 

Previous articleகுடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை கிடைக்குமா? எந்த ரேசன் கார்டுக்கு கிடைக்கும்? 
Next articleதேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு! மாணவர்கள் ஆர்வம்!