இன்றைய மக்கள் காலகட்டத்தில் சர்க்கரை 60% பேருக்கு உள்ளது. அது வம்சாவளியாக வருகின்றதா? அல்லது நமது உணவு பழக்கத்தின் மூலம் வருகின்றதா? என்பது தெரியவில்லை. ஆனால் யாரை கேட்டாலும் எனக்கு சர்க்கரை 200 இருக்கின்றது 400 இருக்கின்றது என்று சொல்லுவார்கள். அதை பெருமையாக சொல்பவர்களும் கூட உள்ளனர்.
திடீரென காலில் லேசாக காயம் ஏற்பட்டாலே நான்கு மாதம் வரைக்கும் காயாமல் அதை வாட்டி வதைத்து எடுத்து விடுகிறது இந்த சர்க்கரை. எங்கு அடிபட்டு விடுமோ என்று பயந்து பயந்து செல்ல வேண்டி இருக்கிறது. சர்க்கரை வந்துவிட்டால் அனைத்து நோய்களும் வந்துவிடும் என்று சொல்லுவது உண்மையே, நரம்பு பிரச்சனைகளில் இருந்து, கண் பிரச்சனையிலிருந்து, கணையம் பிரச்சனையிலிருந்து சிறுநீரகம் பிரச்சனையிலிருந்து அனைத்தும் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் அந்த உறுப்புகள் பாதிக்கப்படுவது என்பது உண்மைதான்.
அந்த சர்க்கரை வந்தவர்களிடம் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால் கண்ணில் கண்ணீர் வராத அளவிற்கு சொல்லுவார்கள். இந்தக் காயை நீங்கள் சுவையாக சட்னி செய்து சாப்பிட்டு வர சர்க்கரை அளவு குறையும்.
இப்பொழுது அந்த சட்டினியை எப்படி செய்வது என்று பற்றித்தான் இந்த பதிவு
தேவையான பொருட்கள்:
1. எண்ணெய் தேவையான அளவு
2. கடுகு உளுத்தம் பருப்பு சிறிதளவு
3. சுண்டைக்காய் 1 கப்
4. சீரகம் ஒரு ஸ்பூன்
5. தக்காளி இரண்டு நருக்கியது
6. வெங்காயம் 2
7. புளி சிறிதளவு
8. வெந்தயம் கால் டீஸ்பூன்
9. உப்பு தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயை வைக்கவும்.
2. சிறிதளவு எண்ணெய் ஊற்றி என்னை காய்ந்த பின்பு சிறிதளவு வெந்தயம் கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிக்க விடவும்.
3. சிறிது சிறிதாக நறுக்கிய இரண்டு வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து வனக்கவும்
5. நான்கு ஐந்து வர மிளகாய் சேர்த்து கொள்ளவும். மற்றும் 4 பல் பூண்டு சேர்க்கவும்
6. பின்பு நன்கு வதங்கிய உடன், நன்றாக இடித்து 4&5 முறை கழுவி சேர்த்து கொள்ளவும். பின் புளி சேர்த்து கொள்ளவும்.
7. உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
8. பின் மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
9. இந்த சட்னியை நீங்கள் சாதத்திற்கு சாப்பிடலாம் இப்படி வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை சாப்பிட்டாலே போதும் சர்க்கரையின் அளவு குறையும். சுண்டைக்காய் மிகவும் கசப்பாக உள்ளது என்று நினைக்காதீர்கள்.