இந்த பால் குடித்தால் கண் மங்குதல், நரம்பு தளர்ச்சி, உடல் சோர்வு பறந்து போகும்!

0
60

அதீத சர்க்கரை நோயினால் அல்லது ஜெனிடிக் பிரச்சனையால் கண்களின் குறைபாடுகள் அதிகமாக இன்றைய இளம் தலைமுறைக்கும் சிறு வயது குழந்தைகளுக்கும் கூட உள்ளது.

 

பிறந்ததிலிருந்து கண்கள் குறைபாடுகள் ஒரு சில குழந்தைகளுக்கு உள்ளது. அதேபோல் கண்ணாடி அணியும் குழந்தைகளை கண்டால் என்னடா இந்த இந்த வயதிலேயே கண்ணாடி அணிந்திருக்கிறார்கள் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் அதற்கெல்லாம் காரணம் என்ன ஜெனிட்டி குறைபாடாக இருக்கலாம் அல்லது குழந்தைகள் அழும் பொழுது செல்போன்களை கொடுத்து இன்றைய அம்மாக்கள் பார்க்க விடுவதனால் என்னவோ இந்த கண்கள் குறைபாடுகள் ஏற்படுகிறது.

 

வயதான பிறகு கண் நரம்புகள் பாதிக்கப்படுவதும் உண்டு.

 

அப்படி கண் மங்குதல் மற்றும் உடல் சோர்வு நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு இந்த இலை மற்றும் பால் மிகுந்த பலன் அளிக்கிறது.

 

தேவையான பொருட்கள்:

 

முருங்கை பூ: இரண்டு கைப்பிடி

பால் ஒரு லிட்டர்

நாட்டு சக்கரை தேவையான அளவு.

 

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

2. பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி கொள்ளவும்.

3. அந்தப் பாலில் இரண்டு கைப்பிடி அளவிற்கு சுத்தமான அலசி எடுத்த முருங்கை பூவை போட்டுக் கொள்ளவும்.

4. ஒரு லிட்டர் பால் ஆனது அரை லிட்டர் ஆகும் வரை சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.

5. பின்பு வடிகட்டிக் கொள்ளவும்.

6. அந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்

7. சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாக குடிக்கலாம் அல்லது இரவில் சாப்பிடுவதற்கு பின்பு அரை மணி நேரம் கழித்து குடிக்கலாம்.

இவ்வாறு நாம் குடித்து வரும் பொழுது நமக்கே கண்ங்குதல் சரியாவது தெரியும். அதேபோல் நரம்புகள் வலுப்பெற்று ரத்தமானது சீராக அனைத்து பாகங்களுக்கும் செல்வது உங்களால் உணர முடியும்.

Previous article10 நிமிடத்தில் பல்வலி பறந்து போகும்! 3 பொருள் போதும்!
Next articleஎழுந்த உடன் கால் கீழே வைக்க முடிய வில்லையா? வலிக்குதா? ஒரு வாரம் இதை குடிங்க!