இனிமேல் ரேசன் கடைகளில் அரிசிக்கு பதில் பணமா?? மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!
ரேசன் கடைகளில் வழங்கப்படும் 5 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக ரூ.170 பணமாக வழங்க கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியால் வழங்கப்பட்டன. அதன்படி தேர்தல் வாக்குறுதிகளை அந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றத் தொடங்கியுள்ளது.
அதன் வாக்குறுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு [பிபிஎல் கார்டு வைத்துள்ளவர்கள்] 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் எனத் தெரிவித்து இருந்தது. இதில் தற்போது 5கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து மேலும் 5 கிலோ கூடுதலாக வழங்குவதற்கு அரிசி கொள்முதல் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதால் மீதம் வழங்கப்பட வேண்டிய 5 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இலவச அரிசி 1 கிலோவுக்கு 34 ரூபாய் வீதம் ஐந்து கிலோவுக்கு மொத்தம் ரூ.170 வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகையானது வருகின்ற ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. ஆனால் இது நிரந்திரம் அல்ல. அரிசி கொள்முதல் செய்யும் வரை மாற்று வழி என சட்டம் மற்றும் பாராளுமன்ற மந்திரி எச்.கே.பாட்டில் கூறியுள்ளார்.