இனி இது கல்லூரிகளில் கட்டாயம்!வெளிவந்தது வழிகாட்டு நெறிமுறைகள்!
கரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டு காலமாக இந்தியாவை பெருமளவு பாதித்து வந்தது. இந்நிலையில் தொற்று அதிக அளவில் பரவும் என்ற காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் கற்பிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது தொற்றின் பாதிப்பு குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி,கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த வகையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை ஆணையம் வெளியிட்டது.ஆனால் கல்லூரிகள் எந்த வகை வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது வெளியிடவில்லை. இன்று அதற்கான வழிமுறைகள் வெளிவந்துள்ளது.அந்த வகையில், கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் இரு தவணைத் தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும்.
அதேபோல தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். சில மாதம் முன்பு தொற்று அதிகமாக காணப்பட்டதால் மருத்துவமனைகள் போதிய அளவு இடம் இல்லாததால் சில கல்லூரிகளில் மருத்துவமனைகளாக உபயோகம் செய்து இருந்தனர்.அந்த கல்லூரிகளில் இன்றளவும் தொற்று உடையவர்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அந்த கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.யாரேனும் மாணவர்களோ அல்லது ஆசிரியர்களும் தடுப்பூசி போடவில்லை என்றால் கல்வி நிர்வாகம் ,சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு நேரடியாக சுகாதாரத்துறையினர் கல்லூரிக்கே வந்து தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
அதேபோல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அமரும் நாற்காலிகள், வகுப்பறைகள் ,விளையாட்டு கருவிகள் ,ஆய்வகங்கள் என அனைத்திலும் இரு நேரங்களிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.அதேபோல சுத்தமான குடிநீர் வசதி ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.மேலும் கல்லூரி திறப்பதற்கு ஒரு வாரம் முன்னே கல்லூரி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த நடவடிக்கை வழிமுறைகள் அனைத்தும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கு என்பது குறிப்பிடத்தக்கது.