cricket: பும்ரா தலைமையில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் ரோஹித் சர்மா வேண்டாம் பும்ரா வே போதும் என ரசிகர்கள் கருத்து.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி தொடரின் முதல் வெற்றியை அபார வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி. இந்த முதல் போட்டியின் தற்காலிக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. மேலும் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா குடும்ப சூழ்நிலை காரணமாக முதல் பங்கேற்கவில்லை. அதனால் முதல் போட்டியில் இந்திய அணியை ஜஸ்ப்ரித் பும்ரா தலைமை தாங்கினார்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியானது பும்ரா கேப்டன்சியில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ரசிகர்கள் இனி இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா வை ஓய்வு பெற சொல்லுங்கள் இனி பும்ரா தலைமை தாங்கட்டும் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் ரோகித் சர்மாவை விட சிறந்த கேப்டன் அல்ல. போட்டியின் தொடக்கத்திற்கு முன் அவரிடம்தான் ஆலோசனை கேட்டேன். அவர்தான் எங்கள் கேப்டன் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்.