இனி மெட்ரோ ரயில்கள் இந்த நேரத்தில் தான் இயங்கும்! நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

0
137
Metro trains are no longer running at this time! Information posted by Admin!
Metro trains are no longer running at this time! Information posted by Admin!

இனி மெட்ரோ ரயில்கள் இந்த நேரத்தில் தான் இயங்கும்! நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

கொரானா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டு காலமாக மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.ஆறு மாத காலம் ஊரடங்கும் அடுத்த ஆறு மாத காலம் தளர்வுகளற்ற ஊரடங்கும் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர்.தற்பொழுது திமுக ஆட்சி அமைத்த பிறகு இரண்டாம் அலை தொற்று பாதிப்பு மிகவும் மோசமாக காணப்பட்டது.அதன் தாக்கம் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்கள் மருத்துவ வசதிகளின்றி பெருமளவு சிரமப்பட்டனர்.அப்பொழுது தமிழக அரசு மீண்டும் ஒரு மாத காலம் ஊரடங்கு நீடித்தது.அவ்வாறு நீட்டித்தும், கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்தியதாலும் தற்போது தொற்றில் இருந்து சிறிது சிறிதாக விடுபட்டு வருகிறோம்.

அந்தவகையில் நேற்று தமிழக முதல்வர் ஊரடங்கு காண ஆலோசனை கூட்டம் நடத்தினார். தற்பொழுது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பல தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார்.அதில் திரையரங்குகள் பள்ளிகள் ,கல்லூரிகள், என அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என கூறியுள்ளனர். மேலும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.பள்ளிகள் திரையரங்குகள் கல்லூரிகள் ஆகியவற்றில் சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படும் என தெரிவித்தார்.அந்த வகையில் சென்னையில் நாளை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என கூறியுள்ளனர்.விடுமுறை நாளான ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் செயல்படும் என தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் முகக் கவசம் அணிய வில்லை என்றால் ரூ 200 வரை அபராதம் வாங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.தற்பொழுது வரை முக கவசம் அணியாமல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த 177 பயணிகளிடம் இருந்து 35 ஆயிரத்து 700 ரூபாய் வசூலிக்க பட்டதாகவும் மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.அரசாங்கம் கூறும் அனைத்து விதிமுறைகளும் மக்களின் பாதுகாப்பிற்கு  என அதை உணர்ந்து மக்கள் அதனை பின்பற்ற வேண்டும்.

Previous articleசிறுவனுக்கு எமனான தெரு நாய்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!
Next articleசேலம் மாவட்ட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி!