இன்னும் 1 மணி நேரம் தான் கரெண்ட் இருக்கும்! சென்னை மக்களே ! இந்த பகுதியில் மின்வெட்டு!

0
151

ஜூன் 19 ஆம் தேதியிலிருந்து மின் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதால் ஓரிரு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

 

கடந்த 10 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதனால் பழுதடைந்த மின்கம்பங்கள், சாய்ந்த மின்கம்பங்கள், மின் கம்பத்தை தாங்கு கம்பிகள் , பழுதடைந்த மின் பெட்டிகள், பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், மரக்கிளைகள் அகற்றம் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது இதனால் இவற்றை 10 நாட்களுக்குள் செய்து முடிக்குமாறு மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளதால், விரைவில் முடிக்கப்பட வேண்டும் என அனைத்து மின் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்நிலையில் இன்று அதற்கான பணிகள் தொடர உள்ளன. இது குறித்து மின்சார வாரியம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சென்னையில் 19.06.2021 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

 

புழல் பகுதி : வள்ளுவர் நகர், பாரதிதாசன் நகர் மற்றும் சுற்றியுள்ளபகுதிகள் மின்வெட்டு ஏற்படும்.

 

ஸ்டான்லி பகுதி : அம்பேத்கார் நகர், ஸ்டான்லி நகர், ஜெயராம் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின்வெட்டு ஏற்படும்

 

சைதாப்பேட்டை பகுதி; ரெங்கராஜாபுரம், தாமஸ் நகர், காக்கன்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின்வெட்டு ஏற்படும்.

 

போரூர் பகுதி : கெருகம்பாக்கம், போரூர், காரம்பாக்கம், மாங்காடு, குன்றத்துhர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின்வெட்டு ஏற்படும்.

 

நீலாங்கரை பகுதி : ப்ளு பீச் ரோடு, சீ வியுவ் அவென்யூ, கேசுரினாடிரைவ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின்வெட்டு ஏற்படும்.

 

பாலவாக்கம் பகுதி : சின்ன நீலாங்கரிகுப்பம், ரங்கரெட்டிகார்டன், மேட்டு காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின்வெட்டு ஏற்படும்.

 

கிண்டி பகுதி : மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், டி.ஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின்வெட்டு ஏற்படும்.

 

கே கே நகர் பகுதி: அசோக் நகர், கே.கே நகர், வடபழனி, அழகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின்வெட்டு ஏற்படும்.

 

அம்பத்தூர் பகுதி; புளியம்பேடு, தேவிநகர், சூசைநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின்வெட்டு ஏற்படும்.

 

பட்டாபிராம் பகுதி : ராஜிவ்காந்தி நகர், லட்சுமி நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின்வெட்டு ஏற்படும்.

 

திருமுல்லைவாயில் பகுதி : லட்சுமிபுரம் கோனிமேடு, காந்திநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின்வெட்டு ஏற்படும்.

 

மணலி புதுநகர் பகுதி: மணலி நியூ டவுன், கே.ஜி.எல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மின்வெட்டு ஏற்படும்.

 

மேலூர் பகுதி : பட்டமந்திரி, வள்ளுர், அத்திப்பட்டு.

அடையார் பெசன்ட் மற்றும் அடையார் மின்வெட்டு ஏற்படும்

 

சாஸ்திரி நகர் பகுதி: டி.எம்.எம். தெரு, அண்ணா காலனி, வண்னன்துரை, எம்.ஜி ரோடு, லட்சுமிபுரம் போன்ற பகுதியில் மின்வெட்டு ஏற்படும்.

 

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி : 100 அடி சாலை, லட்சுமி நகர், எம்.ஜி.ஆர். நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும் மின்வெட்டு ஏற்படும்.

 

வேளச்சேரி கிழக்கு பகுதி : டான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் விரிவு, அன்னை இந்திரா நகர், VGP செல்வா நகர் மற்றும் விரிவு, பாலமுருகன் நகர், வீணஸ் காலனி போன்ற மின்வெட்டு ஏற்படும்.

Previous articleமுடிவுக்கு வரும் ஊரடங்கு! அறிவிக்கப்படுமா புதிய தளர்வுகள்?
Next articleசென்னையில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர் வேலை வாய்ப்பு!