உங்களால் பசியை கட்டுப்படுத்த முடியவில்லையா.. இதோ ஒரு முறை இந்த கஞ்சியை குடித்து பாருங்கள்!!

0
45

உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பசி அடிப்படை தேவையாக உள்ளது.ஆனால் ஒருவருக்கு அளவிற்கு அதிகமாக பசி ஏற்பட்டால் அவை உடல் நலக் கோளாறுகள் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும்.

பசிக்கும் பொழுதெல்லாம் உணவு உட்கொண்டால் உடலில் கலோரி அளவு அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.எனவே பசியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பச்சை பயறு,அரிசி மற்றும் மேலும் சில பொருட்களை கொண்டு கஞ்சி செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:

1)பச்சை பயறு

2)வெந்தயம்

3)அரிசி

4)பூண்டு பற்கள்

5)துருவிய தேங்காய்

6)உப்பு

செய்முறை விளக்கம்:

முதலில் அரை கப் அளவிற்கு பச்சை பயறு மற்றும் கால் கப் அளவிற்கு அரிசி எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு தண்ணீரை வடித்துவிட்டு குக்கரில் அதை சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு 5 முதல் 6 பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு பச்சை பயறில் சேர்க்கவும்.அடுத்து அரை தேக்கரண்டி வெந்தயத்தை ஊறவைத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.

பிறகு ஆறு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.

குக்கர் விசில் நின்றதும் மூடியை திறந்து வேக வைத்துள்ள பச்சை பயறு கலவையை மத்து கொண்டு சிறிது கடைந்து எடுக்கவும்.

பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் சுவைக்காக சிறிது தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து பருகினால் பசி கட்டுப்படும்.

Previous articleபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தபால் துறையில் வேலை வாய்ப்பு!!
Next articleஇனி காசுப்போட்டு ஹேர் டை வாங்க தேவையில்லை!! 3 மாதம் உங்களது முடி கருகருவென இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!!