உடல் சூடாவதை தடுக்கும் கரும்பு பால்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா?

Photo of author

By Divya

உடல் சூடாவதை தடுக்கும் கரும்பு பால்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா?

உடலில் உள்ள சூட்டை தணிக்க கரும்பு பால் சிறந்த தீர்வாக இருக்கிறது.கருப்பு பால் குளிர்ச்சி நிறைந்த பானம்.இவை உடலில் நீர் வற்றுவதை தடுக்கிறது.கரும்பு பால் உடலுக்கு புத்துணர்வை கொடுக்க கூடிய சுவை மிக்க ஆரோக்கிய பானம் ஆகும்.

கோடை காலத்தில் ஏற்படக் கூடிய தண்ணீர் தாகம்,பசியின்மை போன்ற பாதிப்புகளை சரி செய்ய கருப்பு பால் அருந்தி வரலாம்.கரும்பு பாலில் அதிகளவு பொட்டாசியம்,கால்சியம்,இரும்பு,துத்தநாகம்,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

கரும்பு பால் உஷ்ணத்தை குறைப்பதோடு உடல் சோர்வத்தையும் தடுக்கிறது.உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் கருப்பு பால் ஒரு கிளாஸ் என்ற அளவில் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும்.

உடல் சூட்டால் ஏற்படக் கூடிய மஞ்சள் காமாலை பாதிப்பை கரும்பு பால் குணப்படுத்துகிறது.கல்லீரல் தொடர்பான பாதிப்புகளை முழுமையாக சரி செய்து உதவுகிறது.சிறுநீரக தொற்று,சிறுநீரக கல் போன்ற சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளை குணமாக்கி கொள்ள கரும்பு பால் அருந்தி வரலாம்.கரும்பு பால் அருந்துவதால் சிகிச்சை இன்றி சிறுநீரக கற்களை கரைத்து கொள்ள முடியும்.

வெளியில் சென்றால் மயக்கம் வருகிறது என்று சொல்லும் நபர்கள் கரும்பு பால் அருந்துவது நல்லது.உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் அவை மலச்சிக்கல் பாதிப்பை உண்டு பண்ணும்.அதேபோல் செரிமான பிரச்சனை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் உருவாகும்.இந்த பாதிப்புகளை சரி செய்ய காலையில் வெறும் வயிற்றில் கரும்பு பால் ஒரு கிளாஸ் குடித்து வருவது நல்லது.

உடலை குளுமையாக்க கூல்ரிங்க்ஸ்,செயற்கை நிறமூட்டப்பட்ட பானங்களை அருந்துவதை தவிர்த்து கரும்பில் இருந்து கிடைக்க கூடிய சாறை அருந்துவது நல்லது.