உப்பு எதில் அதிகமானாலும் இனி கவலை இல்லை! இத பண்ணுங்க!

0
141

நான் சமைக்கும் பொழுது நம்மை அறியாமலேயே உப்பை அதிகமாக கொட்டி விடுவோம்.

என செய்வதென்றே தெரியாமல் வீட்டில் உள்ளவர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்போம். இந்த கவலை இனி வேண்டாம் .

எந்த ஒரு சமையலில் உப்பு அதிகமானாலும் அதற்கு ஏற்றவாறு எதை சேர்த்தால் உப்பு சமமாகும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

 

1. முதலில் நாம் வைக்கும் கூட்டு பொரியலில் உப்பு அதிகமாகி விட்டால் என்ன செய்யலாம். சிறிதளவு தயிரை எடுத்து கூட்டு பொரியலுடன் சேர்த்து கலந்து விட்டுக் கொண்டால் கூட்டும் சுவையாக இருக்கும். உப்பும் சமமாகிவிடும்.

 

2. நாம் சாதாரணமாக செய்யும் கேரட் மற்றும் பீட்ரூட் பொரியலில் உப்பு அதிகமாகி விட்டால் என்ன செய்யலாம். இதில் நாம் தயிரை சேர்க்க முடியாது. இப்பொழுது ஒரு அரை மூடி தேங்காயை எடுத்து நன்றாகத் துருவி பொரியலின் மேல் தூவி கலந்து கொண்டால் உப்பு சமமாகிவிடும்.

 

3. இப்பொழுது நாம் வைக்கும் குருமாவில் உப்பு அதிகமாகி விட்டால் என்ன செய்யலாம். இதில் நாம் தேங்காவையோ அல்லது தைரையோ சேர்க்கவும் முடியாது.

அரை எலுமிச்சம் பழத்தை எடுத்து குருமாவில் பிழிந்து விட்டுக் கொண்டால் உப்பு சமமாகிவிடும்.

 

4. இப்பொழுது நாம் வைக்கும் சிக்கன் மற்றும் மட்டன் குழம்புகளில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்யலாம். மைதா மாவு எடுத்து நன்கு சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும். குழம்பு கொதிக்கும் பொழுது இந்த உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வைத்தோமே என்றால் உப்பை அந்த கோதுமை மாவு எடுத்து விடும். அல்லது சப்பாத்தி மாவை பிசைய முடியாது என்று நினைத்தீர்கள் என்றால் உருளைக்கிழங்கை எடுத்து இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக வெட்டி கொதிக்கும் குழம்பில் போட்டீர்கள் என்றால் அந்த உருளைக்கிழங்கு உப்பை எடுத்து விடும்.

 

5. இப்பொழுது உப்புமாவில் உப்பு அதிகமாக இருந்தால் என்ன செய்யலாம். இதற்கும் அரை மூடி தேங்காவை எடுத்து நன்றாக துருவி ஒரு கைப்பிடி தேங்காவை உப்புமாவில் போட்டு கிளறிக் கொண்டால், சுவையாகவும் இருக்கும், உப்பும் சமமாகிவிடும்.

 

6. இப்பொழுது நாம் செய்யும் பிரைட் ரைஸ் அல்லது பிரியாணி உணவுகளில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்யலாம்.

ஒரு வெங்காயத்தை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வைத்து எண்ணெயில் வறுத்து பிரியாணி அல்லது ப்ரைட் ரைஸ் சேர்த்துக் கொண்டால் உப்பு சமமாகிவிடும்.

 

7. சிக்கன் அல்லது மீன் வறுக்கும் பொழுது அதில் உப்பு அதிகமாக இருந்தால் என்ன செய்யலாம். மீன் அல்லது சிக்கன் எண்ணெயில் கொதித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு ஸ்பூன் நெய்யை எண்ணெயில் விட்டால் உப்பு சமமாகிவிடும்.

 

Previous articleதினமும் இந்த ஜுஸ் குடிச்சா! இரத்த சோகை பிரச்சனையே இருக்காது!
Next articleபெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க