உலக கோப்பையை ரோகித் கோலியால் மட்டும் வெல்ல முடியாது! முன்னாள் கேப்டன் கடும் தாக்குதல்!

Photo of author

By Amutha

உலக கோப்பையை ரோகித் கோலியால் மட்டும் வெல்ல முடியாது! முன்னாள் கேப்டன் கடும் தாக்குதல்!

இந்தியாவில் ஐசிசி 50 ஓவர் இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. ஐசிசி தொடர் 50 ஓவர் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் மூன்றாவது முறையாக உலக கோப்பையை இந்தியா வெல்லுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 2011 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை தோனி வென்றது போல் 2023 ஆம் ஆண்டில் ரோகித் சர்மா வெல்வார் இப்போதே 2011 ரிப்பீட் ஆகுமா? என பல எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கு முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய அணி முதல் உலகக் கோப்பையை 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் வென்றது. ஒன்றுமே இல்லாத நிலையில் உலக கோப்பையை வென்றவர் கபில்தேவ். இந்திய வீரர்களின் பார்வையில் கிரிக்கெட்டின் அர்த்தத்தை மாற்றியதோடு இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான அடித்தளமிட்டவர் கபில்தேவ் என்பது மிகையாகாது.

இந்நிலையில் கபில்தேவ் அளித்த பேட்டியில் 2023 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா? என்ற கேள்விக்கு நேர்மையாக பதில் அளித்துள்ளார். அதில் இந்தியா உலக கோப்பையை வெல்ல ரோகித் சர்மா விராட் கோலி அல்லது 2-3 வீரர்களை  மட்டும் நம்பி பயனில்லை என்று கூறியுள்ளார்.

உலக கோப்பையை இந்தியாவில் உள்ள பயிற்சியாளர், அணி நிர்வாகம்,  தேர்வாளர்கள் தனிப்பட்ட நலன்களைப் புறந்தள்ளி சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும்.  அணியை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். ரோகித் சர்மா,விராட் கோலி மற்றும் 2 -3 வீரர்கள் மட்டும் உலக கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது நீங்கள் உங்கள் அணியை முழுமையாக நம்ப வேண்டும்.

நம்மிடம் அப்படிப்பட்ட ஒரு அணி இருக்கிறதா? உங்களை நீங்களே கேட்டுக் கொண்டு,  கண்டிப்பாக எங்களிடம் மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள் ஆமாம் கண்டிப்பாக!  உலகக்கோப்பை வெல்லக்கூடிய அணி வீரர்கள் எங்களிடம் உள்ளனர் என தங்களை தாங்களே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு சிறந்த அணி வீரர்களை தேர்வு செய்து ஒரு அணியை உருவாக்க வேண்டும்.

எப்போதும் இரண்டு அல்லது மூன்று வீரர்கள் ஒரு அணியின் தூண்களாக  தங்களை உருவகப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களைச் சுற்றியே அனைத்தும் பின்னப்படுகிறது. தேர்வு செய்யப்படுகிறது இப்படி இருக்க கூடாது .அவ்வாறில்லாமல் ஐந்து அல்லது ஆறு மேட்ச் வின்னர் களை உருவாக்க வேண்டும். அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம். இளைஞர்கள் முன் வந்து இது எங்கள் நேரம் எனக்கு கூற வேண்டும் என்றும்  கபில்தேவ் கூறினார்.