புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகருக்கு தமன்னா கொடுத்த லிப்லாக்! டேட்டிங் சென்றபோது எடுத்த வீடியோ வேகமாக பரவிவருகிறது!

0
217

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகருக்கு தமன்னா கொடுத்த லிப்லாக்! டேட்டிங் சென்றபோது எடுத்த வீடியோ வேகமாக பரவிவருகிறது!

பிரபல நடிகர் ஒருவருக்கு நடிகை தமன்னா முத்தம் கொடுக்கும் காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

தமிழில் கல்லூரி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி விஜய் ,அஜித் ,கார்த்தி, சூர்யா என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை தமன்னா. இப்போது தமிழில் அவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி மலையாளம் என பிசியாக நடித்து வருகிறார்.

ஓடிடியில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ் இவருக்கு நல்ல கம்ப்பேக் கொடுத்தது. இவர் போலா சங்கர் என்ற தெலுங்கு படத்திலும் போலே சூடியன், பாந்த்ரா, லாஸ்ட் ஸ்டோரிஸ் -2 என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்குவதுண்டு.  அதேபோல் தற்போது நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாகவும் எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாக செல்வதாகவும் செய்தி பரவி வருகிறது.

இதனை உறுதி செய்யும் விதமாக நடிகை  தமன்னா நடிகர் விஜய் வர்மாவுடன் புத்தாண்டு கொண்டாட கோவா சென்றுள்ளார். நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவர் நடிகர் விஜய்க்கு முத்தம் கொடுக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்தப் பார்ட்டியில் ஜிகு ஜிகு வென ரோஸ் நிற உடையில் வந்திருந்தார் தமன்னா. அனைவரும் ஹேப்பி நியூ இயர் என கத்தி கூச்சலிட்டு நியூ இயரை வரவேற்கும் போது எடுத்த வீடியோவில் விஜய் வர்மாவுக்கு தமன்னா கொடுத்த  லிப்லாக்  கொடுத்த சீனும் பதிவாகி இருந்தது.  லஸ்ட்ஸ்டோரீஸ்- 2 வில் தமன்னாவும் விஜய் வர்மாவும் இணைந்து நடிக்கின்றனர். இதில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. தற்போது இருவரும்  ஒன்றாக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி டேட்டிங் சென்று வருவதாகவும் இதன் மூலம் தங்கள் காதலை தெளிவுபடுத்தியதாகவும் செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன.

 

 

Previous articleஉலக கோப்பையை ரோகித் கோலியால் மட்டும் வெல்ல முடியாது! முன்னாள் கேப்டன் கடும் தாக்குதல்!
Next articleஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்…உங்களுக்கு தமிழக அரசில் உடனடி வேலைவாய்ப்பு !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here