உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி! பதாகைகள் ஏந்தியபடி உலா வந்த மருத்துவ மாணவர்கள்!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கல்லூரி முதல்வர் பி என் ரிச்சர்டு ஜெகதீசன் அவர்கள் தலைமையில், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி முதலாம், மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் 80 பேர் கலந்துகொண்டு உலக சுற்று சூழல் தின விழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலைய சந்திப்பு அருகே முடிவுற்றது. மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முன்னதாக கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது