ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளிவரும் முடிவுகள்!

Photo of author

By Rupa

ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளிவரும் முடிவுகள்!

கொரோனா தொற்றானது கடந்த ஆண்டிலிருந்து கட்டுக்கடங்காமல் பரவிய நிலையில் தான் உள்ளது.இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே மக்களின் பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.கொரோனா தொற்று அதிகமாக பரவிய காரணத்தினால் சென்ற ஆண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு முழு ஊரடங்கை அமல்படுத்தியதற்கு நற்பலன் கிடைக்கும் விதமாக சென்ற ஆண்டு பாதிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டது.மீண்டும் சில தளர்வுகள் அடிப்படையில் மக்கள் வெளியே செல்ல உத்தரவிட்டனர்.

மீண்டும் மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் மக்கள் கொரோனா தொற்றை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.அதன் விளைவாக இந்த ஆண்டு கொரோனாவின் 2 வது அலை மக்களை பெருமளவு பாதித்தது.இந்த கொரோனாவின் இந்த 2-ம் அலைக்கு நமது இந்திய அதிகப்படியான உயிர்களை இழந்து விட்டது.அதுமட்டுமின்றி மற்ற நாடுகளிலிருந்தும் பல்வேறு உதவிகளை நாடி இருந்தோம்.இந்த கொரோனா தொற்றின் 2வது அலை பரவலிளிருந்து மக்களை காப்பாற்ற மீண்டும் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது.அந்தவகையில் தமிழ்நாட்டில் முதலில் சில தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தினர்.

அவ்வாறு அமல்படுத்தியதில் தொற்று பரவுவதை கட்டுக்குள் கொண்டு வரமுடியாததால் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அதனையடுத்து சென்ற மாதம் 31ம் தேதி முடிய வேண்டிய ஊரடங்கை மக்கள் நலன் கருத்தி மற்றொரு வாரம் சேர்த்து மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிய உள்ளது.

இந்நிலயில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து இன்று சென்னியிலுள்ள தலைமை செயலகத்தில் காலை 11.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.ஓரிரு நாட்கள் முன்பு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் கூறினார்.அந்தவகையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புகள் குறைவு என்றே அரசியல் சுற்று வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.