எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம்!! ஓபிஎஸ் அணி நிர்வாகி அதிரடி பேச்சு!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.இன்று நான்காம் நாள் வேட்பு மனு தாக்கல் துவங்கியது முதல் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தன்னுடைய மகன் விட்டுச் சென்ற பணிகளை தான் செய்வேன் என கூறினார்.
அதன் பிறகு ஆமமுக வேட்பாளர் சிவ பிரசாத் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு அதிமுக ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில் முருகன் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் வேட்பு மனுவில் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக என்ற இடத்தில் ஆம் எனவும் அதிமுக கட்சியின் பெயர் அதிமுக என்றும் குறிப்பிட்டு இரட்டை இலை சின்னத்தையும் கூறி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதனை அவர் செய்தியாளர்களிடமும் தெரிவித்தார். மேலும் நாளை சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான அன்று வேட்பு மனு கிடையாது திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. ஏழாம் தேதி செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் அன்று இபிஎஸ் அணியினர் வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக இன்று இபிஎஸ் வேட்பு மனுதாக்கல் செய்வதாக கூறி இருந்த நிலையில் ஆனால் கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தார்கள். முன்னதாக ஓபிஎஸ் அணியின் அலுவலகம் இன்று காலை ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது கிருஷ்ணன் கூறும் பொழுது தாங்கள் தான் உண்மையான வேட்பாளர் எனவும் தங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.