ஒமைக்ரானிடமிருந்து நுரையீரலை பாதுகாக்க இதோ இந்த பத்து உணவுகள் போதுமாம்!
நமது உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று தான் நுரையீரல்.நமது உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய ஆக்சிஜனை காற்றில் இருந்து பிரித்தெடுத்து கொடுக்கும் சிறப்பான பணியை நுரையீரல் செய்து வருகிறது. நாம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம். இந்த சுவாச காற்றானது நூற்றில் 50% மாசான தாகவே காணப்படுகிறது. நாம் வெளியே செல்லும்போது வண்டிகளில் இருந்து வெளியேறும் புகை தூசு புகை இலை புகைபிடிப்பது போன்றவை நுரையீரலுக்கு அதிக கேடு விளைவிக்கும்.இது அனைத்தும் விட தற்பொழுது மிகக் கொடிய வைரசான கொரோணா காற்றின் மூலம் பரவி வருகிறது.அதனால் நுரையீரல் அதிவேகத்தில் பாதிப்பை சந்திக்கிறது.இந்த கொடிய வைரசிடமிருந்து நுரையீரலை பாதுகாப்பாகவும் பலமானதாகவும் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.அவற்றில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் நுரையீரலை பாதுகாக்கும் வகையிலும் பலத்தை தரும் வகையிலும் அதிகளவு சத்துக்கள் உள்ளது.
மஞ்சள்:
மஞ்சள் ஓர் எதிர்ப்பு சக்தி வாய்ந்த பொருளாக பயன்படுகிறது. அதனால் நமது நுரையீரலில் ஏற்படும் தேவையற்ற வைரஸ்களை அளிக்க உதவும். மேலும் நுரையீரலில் ஏற்படும் காயங்களை சரி செய்யவும் இந்த மஞ்சள் ஓர் கிருமிநாசினியாக செயல்படும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உனவில் மஞ்சள் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி ஆஸ்துமா, ரஸ்பெட்ரி தொற்று, சிஒபுடி , நுரையீரல் பாதிப்பு போன்றவை வராமல் தடுக்கும் சக்தி மஞ்சளுக்கு உள்ளது.
இஞ்சி
இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிட் ஆக பயன்படுகிறது.இஞ்சி நுரையீரலில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டுள்ளது.மேலும் இஞ்சி சுவாசப் பாதையை விரிவடைய செய்து சுவாசத்தை சீராக்கும்.காலை நேரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் இன்று கலந்து கொடுத்து வரும் பொழுது நுரையீரல் சுத்தமாக காணப்படும்.
பூண்டு:
பூண்டு ஒரு சிறந்த நோய் எதிர்ப்பியாக பயன்படுகிறது.மேலும் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து சுவாசத்தை சீர் செய்யும் ஆற்றல் படைத்தது.
கிரீன் டீ:
கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.க்ரீன் டீயில் உள்ள டியோ பிளின் என்ற வேதிப்பொருள் ஃப்ராங்கோ டிரையட்ராகவும் பயன்படுகிறது.தினமும் கிரீன் டீ குடித்து வர சுவாசம் சீராகும்.
கீரைகள்:
கீரைகளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.நுரையீரலின் ஆக்சிநேட் சேதம், நுரையீரல் வீக்கம் போன்றவற்றை தடுக்க இந்த கீரைகள் உதவும்.மேலும் நுரையீரல் புற்றுநோய் வருவதையும் தடுக்க உதவும்.
ஒமேகா:
ஒமேகா ஃபேட்டி ஆசிட் உணவுகளை எடுப்பதன் மூலம் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நல்லதை விளைவிக்கும்.நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்க இந்த ஒமேகா ஃபேட்டி ஆசிட் உணவுகளை உட்கொள்வது நல்லது.மீன்,பாதாம் ,வால்நட், ஆலிவ் விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.
குருசிப்ரஸ் காய்கறிகள்:
குருசிபிரஸ் காய்கறிகளான முட்டைக்கோஸ் பிரக்கோலி போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம்உடலுக்கு அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட் கிடைக்கும்.இது நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தப்படுத்த உதவும்.மேலும் இந்த உணவுகள் உட்கொள்வதால் புற்றுநோய் உண்டாகும் காஸ்ட்ரோஜன் நச்சுக்களை அளிக்க உதவும்.
ஆப்பிள்:
ஆப்பிளில் பைட்டோ கெமிக்கல்களான கேட்ட ஜின்கள் , குவார்சிட்டிப் போன்றவை அடங்கியுள்ளது.இவை நுரையீரலைத் தாக்கக் கூடிய தொற்று நோய்களை அழிக்கும் கேடயமாக பயன்படுகிறது.தினந்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர நுரையீரல் இறுக்கம் மிகவும் நல்லது.
சிட்ரஸ் பழங்கள்:
சிட்ரஸ் படங்களான சாத்துக்குடி ஆரஞ்சு எலுமிச்சை போன்றவற்றில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது.இது நுரையீரலின் ஆக்சிஜன் பரிமாற்றம் சீராக இருக்க உதவி செய்கிறது.ஆஸ்துமா, நிமோனியா தொற்று நோய்கள் வராமல் தடுக்க இந்த சிட்ரஸ் பழங்கள் உதவுகிறது. அபபோது இந்த பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அவகாடோ:
அவகாடோ வில் விட்டமின் ஏ, விட்டமின் இ,பி6 போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. மேலும் அவகேடோவில் நல்ல கொழுப்புச் சத்துக்கள் உள்ளதால் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சமீபத்திய ஆய்வில் யார் ஒருவர் தொடர்ந்து அவகடோ சாப்பிட்டு வருகிறாரோ அவர்களுக்கும் நுரையீரல் ஏற்படும் பிரச்சனை தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த உணவுகளை தாண்டி நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வது, மூச்சு பயிற்சி செய்வது, புகைப்பிடிப்பதை தவிர்ப்பது போன்றவை அதிக பலனைக் கொடுக்கும்.