புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை பகுதியில் வசித்து வரும் சித்திரக் குமார் மற்றும் ஜீவிதாவிற்கும் மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள், மகள் பவித்ரா(16) மற்றும் மணிகண்டன் (18) ,பவித்ரா என்பவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார், இந்த நிலையில் பவித்ரா வீட்டில் அதிக நேரம் செல்போனில் நேரத்தை செலவு செய்து கொண்டிருந்திருக்கிறார் பெற்றோர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத பவித்ரா, செல்போனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளார்.
இதனால் வீட்டில் இருந்த அனைவரும் கடிந்துள்ளர்கள், அவரின் அண்ணன் மணிகண்டனுக்கும் பவித்ராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மணிகண்டன் கோபம் தாங்கமுடியாமல் பவித்ராவிடம் உள்ள போனை வாங்கி கீழே போட்டு உடைத்துள்ளார், எனவே மனமுடைந்த பவித்ரா ஊருக்குள்ளே இருக்கும் கிணற்றில் குதித்து விட்டார். இதை பார்த்த மணிகண்டன் பவித்ராவை கிணற்றில் குதித்து காப்பாற்ற முயன்ற போது அவருக்கு நீச்சல் தெரியாததால் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தகவலறிந்த போலீசார் அந்த இடத்திற்கு சென்று வந்து அவர்களை கிணற்றில் இருந்து மீட்டனர் பின்னர் அவர்களை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர். எனவே இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாணவர்கள் கவனமாக கவனிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பெற்றோர்கள் மாணவர்களிடம் செல்போன் கொடுப்பது தவறான செயல் ஆகும்.