கடைசி படம் தாமதம் ஆனாலும்! இதில் ரிலீஸ் வேணாம்!

Photo of author

By Parthipan K

நடிகர் சுஷாந்த் சிங் திரைப்படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டுமென அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பவர் இப்படத்தின் மூலம் உலகமெங்கும் பிரபலமானார்.இவர் அறிமுகமான முதல் படம் “kai po che”.  இந்த  திரைப்படம் மூலம் சினிமா உலகத்தில் கால்பதித்தார்.

இவர் நடிப்பில் வெளியாக இருந்த “Dil Bechara” திரைப்படம் மே 8ஆம் தேதி ரிலீசாவதாக இருந்த நிலையில் , ஊரடங்கால் ரிலிஸ் தேதி தள்ளிப்போனது. இதனால் மற்றும் பல பட வாய்ப்புகள் தள்ளி போனதால் ஏற்பட்ட  மன அழுத்தத்தின் காரணமாக அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவ்வாறு இருக்கையில், Dil Bechara என்ற திரைப்படம் OTT  தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுஷாந்த் சிங்கின் ரசிகர்கள் #DilBecharaOnBigScreen என்ற ஹெஸ்டேக்கை ட்விட்டரில் பதிவிட்டு அவரது திரைப்படம் தியேட்டரில் தான் வெளிவர வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.