பொறுமையை பலவீனமாக கருத வேண்டாம்! இந்தியாவுக்கு சீன பத்திரிக்கை ஆசிரியர் எச்சரிக்கை!

0
67

சீனாவின் பொறுமையை கண்டு பலவீனமானவர்கள் என நினைக்க வேண்டாம் என்று குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையின் தலைமை செய்தி ஆசிரியர் ட்விட்டரில் ட்விட் செய்து உள்ளார்.

இந்தியா சீனா ராணுவத்தினர் இடையே கடந்த ஐந்து வாரங்களுக்கு மேலாக மோதல் போக்கு நீடித்து வந்தது. கடந்த மாதம் மே முதல் வாரத்தில் ஒருமுறையாவது இரு நாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்து வந்த நிலையில்,  பதற்றம் தொடர்ந்தது. மோதலின் தாக்கத்தால் இருநாட்டு எல்லையிலும் தங்களது படைகளை குவித்து வந்தனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதையடுத்து, இரு படைகளும் விலகிக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்தனர். இந்நிலையில் கள்வன் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ள தொடங்கிய போது பாயிண்ட் 14 என்னுமிடத்தில் சீன படைகள் கூடாரம் அடித்து தங்கியுள்ளனர்.

அக்கூடாரங்களை அகற்றக்கோரி இந்திய படையினர் கூறியுள்ளனர். அதனை மறுத்த சீன ராணுவ படைகள் நேற்று முன்தினம் இரவு தாக்குதலில் ஈடுபட்டனர். இரு நாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இரு நாட்டிற்கும் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீன வீரர்கள் 43 பேரும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த மோதலுக்கு பின்பு சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் இந்தியாவை கண்டு நாங்கள் அஞ்சவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் திமிர் பிடித்து நடந்து கொள்ளாதீர்கள், சீனா பொறுமையை கடைபிடிப்பதால், பலவீனமானவர்கள்  என்று தவறாக நினைக்க வேண்டாம். ,இந்தியாவுடன் மோதலை சீனா விரும்பவில்லை. இந்த கருத்துக்கள் அத்தனையும்  இந்திய தரப்பிடம் சொல்ல விரும்புகிறேன் என்று குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையின் தலைமை செய்தி ஆசிரியர் ட்விட்டரில் ட்விட் செய்து உள்ளார்.

author avatar
Parthipan K