கத்தி மற்றும் அரிவாளுடன் சென்ற கல்லூரி இளைஞர்கள்! பீஸ்ட் பட டிக்கெட்டுக்கு இவ்வளவு ரகளையா?

0
154
College youth who went with knife and scythe! So much for the Beast movie ticket?
College youth who went with knife and scythe! So much for the Beast movie ticket?

கத்தி மற்றும் அரிவாளுடன் சென்ற கல்லூரி இளைஞர்கள்! பீஸ்ட் பட டிக்கெட்டுக்கு இவ்வளவு ரகளையா?

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே தொடர்ந்து கலவரம் இருந்து கொண்டே தான் உள்ளது. திங்கட்கிழமை அன்று பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது சில இளைஞர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்கினர். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று சக பயணிகளுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தனர். அதேபோல நேற்று அத்திப்பட்டு ரயில் நிலையத்திலும் நடந்துள்ளது. அத்திப்பட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது 4 கல்லூரி இளைஞர்கள் ரயிலின் மீது கற்களை கொண்டு தாக்கி உள்ளனர்.

இது சக பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. கற்களை வீசி தாக்கியது மட்டுமின்றி கத்தி மற்றும் அரிவாள் கொண்டு அந்த புறநகர் ரயிலில் ஏறியுள்ளனர். அங்குள்ள பயணிகளை மிரட்டியுள்ளனர். பயணிகள் இதுகுறித்து ரயில்வே காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த ரயில்வே காவல்துறையினர் மாணவர்களை தேடி வந்துள்ள நிலையில், மாணவர்கள் பீஸ்ட் பட டிக்கெட் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்த வேளையில் நான்கு பேரையும் பிடித்துள்ளனர். மேலும் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த புறநகர் ரயிலில் ஏறிய இந்த மாணவர்கள் சக பயணிகள் சிலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் செய்த அச்சுறுத்தலால் பல பயணிகள் அவர்களின் இடம் வருவதற்கு முன்னதாகவே நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளதாக கூறுகின்றனர்.இவர்கள் டிக்கெட் வாங்க இவ்வளவு ரகளை செய்தார்களா?அல்லது வேறு கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் தகராறு ஏற்பட்டதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleபீதியடையும் மக்கள்! XE வைரஸ் பாதிப்பு அதிகரிப்பா?
Next articleநான் எந்த தப்பும் செய்யல! நான் நிரபராதி! டிடிவி தினகரனின் கதறல்!