கம்பியை பழுக்க வைத்து கணவர் செய்த விபரீத காரியம்! எதற்கு பெண் குழந்தையை பெற்றெடுத்த?

Photo of author

By Rupa

கம்பியை பழுக்க வைத்து கணவர் செய்த விபரீத காரியம்! எதற்கு பெண் குழந்தையை பெற்றெடுத்த?

பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்து கொண்டே தான் உள்ளது. இந்த டெக்னாலஜி கால கட்டத்தில் பெண்கள் வன்கொடுமை சார்ந்த புகார்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. தினந்தோறும் பாலியல் துன்புறுத்தல் வன்கொடுமை என பல பிரச்சனைகள் குவிந்து கொண்டே உள்ளது. அந்த வகையில் தற்பொழுது மத்திய பிரதேசத்தில் அனைவரையும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தின் மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதியினர் தான் லட்சுமி மற்றும் பப்லு ஜாலா.

இவர்களுக்கு திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. ஓராண்டுகள் குழந்தை இல்லாத நிலையில் கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பப்லு மனைவி லட்சுமி மாதமாக இருந்த காலத்திலேயே ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று பப்லு கூறிவந்துள்ளார். ஆனால் அவர் எண்ணத்திற்கு மாறாக பெண் குழந்தை பிறந்து விட்டது. இதனால் லட்சுமியின் கணவர் பப்லு மற்றும் அவர் குடும்பத்தினருக்கு அந்த பெண் குழந்தை பிறந்தது பிடிக்கவில்லை. பெண் குழந்தை பிறந்ததால் கணவன் மனைவிக்கிடையே தொடர்ந்து சண்டை வந்துள்ளது. அதேபோல அவரது கணவரின் குடும்பத்தாரும் லட்சுமியை தொடர்ந்து திட்டி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்துக்கு மேல் பப்லு லட்சுமி தாக்க ஆரம்பித்துள்ளார். பப்லுவை பார்த்து அவரது குடும்பத்தினரும் பெண் குழந்தை பிறந்ததற்கு லட்சுமியை தாக்க ஆரம்பித்துள்ளனர். உச்சகட்டமாக லட்சுமியின் கணவர் மற்றும் அவரது மாமியார் மாமனார் லட்சுமியை பெண் குழந்தையை பெற்றெடுத்து விட்டாயே எனக்கூறி பிரிவு கப்பல் சூடு வைத்துள்ளார். இவ்வாறு இவர்கள் கொடுமை செய்து வருவதை பல நாட்களாக லட்சுமி தனது அம்மா வீட்டில் கூறாமல் இருந்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் லட்சுமி மீட்டு மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தற்பொழுது லட்சுமி கணவர் மற்றும் மாமனார் மாமியார் மீது வழக்கு தொடுத்து கைது செய்துள்ளனர்.