கருக்கலைப்பு ஏற்பட்டால் ஊதியம் வழங்கும் நாடு..!

Photo of author

By CineDesk

கருக்கலைப்பு ஏற்பட்டால் ஊதியம் வழங்கும் நாடு..!

CineDesk

கருக்கலைப்பு ஏற்பட்டாலோ அல்லது குழந்தை இறந்தே பிறந்தாலும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என்ற சட்டத்துக்கு நியூசிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உலகிலேயே முதல் முறையாக நியூசிலாந்து நாட்டில் விநோதமான சட்டம் ஒன்று இயற்றப்பட்டு அனைவரது கவனத்தையும் இயற்றியுள்ளது. இந்தியா உட்பட நாடுகளில் கருச்சிதைவு ஏற்படுத்துவதை தண்டனைக்குரிய குற்றமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளன. நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி 2வது முறையாக வெற்றிபெற்று ஆட்சி நடத்தி வருகிறது. இளம் பிரதமரான ஜெசிண்டா தலைமையிலான ஆட்சியின் கீழ் தொழிலாளர் நலன் சார்ந்தும், பெண்கள் நலன் சார்ந்தும் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன.

அதில் ஒன்றாக இயற்றப்பட்ட சட்டம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. கருச்சிதைவு அல்லது இறந்த குழந்தை பிறப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட தாய்க்கும், அவர்களின் கணவர்களுக்கும் சம்பளத்துடன் விடுப்பு அளிக்கும் சட்டம் நியூசிலாந்து அரசு சார்பில் இயற்றப்பட்டுள்ளது. பெண்கள் நலன் சார்பில் உலகிலேயே முதல் முறையாக ஒரு சட்டம் இயற்றப்பட்டது நியூசிலாந்து நாட்டில் மட்டுமே. அதேபோன்று குழந்தை இறந்தே பிறந்தால் ஊழியர்களுக்கு கூடுதலாக 3 நாள் விடுப்பு அளிக்கப்படும் என்றும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் தங்களது மருத்துவ விடுப்பை பயன்படுத்த தேவையில்லை என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டம் இயற்றப்பட்ட போது கருச்சிதைவு ஒரு நோய் அல்ல. அது ஓர் இழப்பு என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜின்னி ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இத்தகைய இழப்பிலிருந்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மீண்டு வர நேரம் தேவை என்று தெரிவித்த ஜின்னி ஆண்டர்சன் அதற்கான கூடுதல் விடுப்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு அளிக்கப்படும் என கூறியுள்ளார்.