கர்ப்பிணிகளே உங்களுக்கு தான்!! 1 வாரத்தில் பனிக்குட நீர் அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

Photo of author

By Sakthi

கர்ப்பிணிகளே உங்களுக்கு தான்!! 1 வாரத்தில் பனிக்குட நீர் அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

 

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலங்களில் சில பெண்களுக்கு பனிக்குட நீர் குறைவாக இருக்கும். அவ்வாறு பனிக்குடத்தில் குறைவாக இருக்கும் நீரின் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

பனிக்குட நீர் குறைவதற்கான காரணங்கள்…

 

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பனிக்குட நீர் 36 வாரங்களுக்கு பிறகு குறையத் தொடங்குவது சாதாரணமாக இருப்பது தான். சிலருக்கு பிரசவம் ஆகும் பொழுது அதாவது குழந்தை கர்ப்பப்பையை விட்டு வெளியே வருவதற்கு சிலநாட்களுக்கு முன்னர் அல்லது பிரசவத்தின் போது பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறும்.

 

ஆனால் ஒரு சிலருக்கு 6 மாதத்திலேயே இந்த பனிக்குட நீர் குறைந்து விடும். இந்த பனிக்குட நீரை அதிகரிக்க வேண்டும் என்று சிகிச்சை பெறுவார்கள். இதனை வீட்டு வைத்திய முறையிலும் அதிகரிக்கலாம்.

 

* இந்த பனிக்குட நீர் குறைவதற்கு காரணம் என்னவென்றால் ஒரு சிலருக்கு குழந்தைகள் கர்பப்பையில் உடல் உறுப்புகள் பாதிப்புடன் இருக்கலாம்.

 

* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இரத்த அழுத்தம் காரணமாகவும் பனிக்குட நீர் குறையத் தொடங்கும்.

 

* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பதாலும் அதிக உடல் எடையுடன் இருப்பதாலும் பனிக்குட நீர் குறையத் தொடங்கும்.

 

* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு டயபெட்டிஸ் காரணமாகவும் பனிக்குட நீர் குறையும்.

 

* கர்ப்பமாக இருக்கும் ஒரு சில பெண்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்கமால் இருப்பதாலும் பனிக்குட நீர் குறையும்.

 

பனிக்குட நீர் குறைவதை சரி செய்ய சில வழிமுறைகள்…

 

* பனிக்குட நீர் குறைவதை தடுத்து பனிக்குட நீரை அதிகரிக்க கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும். ஒரு நாளுக்கு 3 முதல் 4 லிட்டர் அளவு குடிக்க வேண்டும். தண்ணீருடன் சேர்த்து அதிகம் இளநீரும் குடிக்க வேண்டும்.

 

* கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பனிக்குட நீரை அதிகரிக்க தர்பூசணி பழம், மாதுளம் பழம் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் பனிக்குட நீர் அதிகரிக்கும்.

 

* கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பனிக்குட நீரை அதிகரிக்க நீர்ச்சத்து அதிகம் உள்ள சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

* கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பனிக்குட நீரை அதிகரிக்க வாழைத் தண்டு ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். வாழைத் தண்டையும் உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

* ஆலிகோ ஹைட்ரோ மினர்ஸ் என்று இந்த பனிக்குட நீர் குறைவதை கூறுவார்கள். இதற்கு பல சிகிச்சை முறைகள் இருக்கும். தற்காலிகமாக பனிக்குட நீரை அதிகரிக்க பெண்ணுறுப்பு வழியாக சலைன் வாட்டர் எனப்படும் தண்ணீரை உள்ளே செலுத்துவதன் மூலம் தற்காலிகமாக பனிக்குட நீரை அதிகரிக்கலாம். ஊசி மூலமாகவும் வயிற்று வழியாக மருந்து செலுத்தி பனிக்குட நீரை தற்காலிகமாக அதிகரிக்க செய்யலாம். கையில் குளுக்கோஸ் போடுவதன் மூலமும் தற்காலிகமாக பனிக்குட நீரை அதிகரிக்கலாம்.

 

பனிக்குட நீர் குறைவாக உள்ள பெண்கள் செய்யக்கூடாதவை…

 

* பயப்படாமல் இருக்க வேண்டும்.

 

* தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது.

 

* நீர்ச்சத்து அதிகம் உள்ள

உணவுகளை சாப்பிடாமல் இருக்கக்கூடாது.